பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நால்வர் நான்மணி மாலை

520

நீதிநூல்


நால்வர் நான்மணி மாலை 520 நீதிநூல்

நால்வர் நான்மணி மாலை = திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயாசிரியர்கள் நால்வர் மீது பாடப்பட்ட நூல். நான்கு மணிகள் கோக்கப்பட்ட மாலை போல வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல்பா ஆகிய நான்கு பாக்கள் மாறிமாறி 10 பாடல்களாக அந்தாதித் தொடையமையப் பாடப்படுவதே நான்மணி மாலையாகும். இம்முறையில் இந் நூல் நால்வர் மீது பாடப்பட்டதனால் இப்பெயர் பெற்றது. இந்நூலால் நால்வரது தலை சிறந்த பெருமைகளையும், தேவார திருவாசகங்களின் ஒப்புயர்வற்ற மாண்பையும், தேற்றத் தெளிய அறிந்துகொள்ளலாம். இந்நூலை வடநூற் கடலும், தென்னூற் கடலும் நிலை கண்டுணர்ந்த சிவஞான முனிவர் தம் சடையில் சிரோரத்னம் போல் வைத்து முடிந்திருப்பார் என்ற ஒரு செய்தியும் கேட்கப்படுதால், இந் நூலின் பெருமை நன்கு விளங்கும். இந் நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமி ஆவார். காலம் கி.பி.17 ஆம் நாற்றாண்டு.

நான்மணிக்கடிகை = இது சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நான்கு விலையுயர்ந்த மணிகளின் துண்டு எத்தனைச் சிறப்புடையதோ அத்துணைச் சிறப்புடையது போன்று ஒவ்வொரு பாடலிலும் சிறந்த நீதிகள் அடங்க இந் நூல் பாடப்பட்டுள்ளமையின் இப்பெயர் பெற்றது. இந் நூலைப் பாடியவர் விளம்பிநாகனார் என்பவர். காலம் கடைச்சங்க காலம்.

நி

நிகண்டு = தமிழன் சொற்பொருள்களை அறிதற்குப் பாட்டு வடிவில் அமைந்த நூலாகும். இந்த முறையில் பல நிகண்டுகள் தமிழில் உண்டு. குறிப்பிடத்தக்க நிகண்டு நூல் சூடாமணி நிகண்டு.

நீ

நீதிநூல் = இந் நூலைப் பாடியவர் வேதநாயகம் பிள்ளை