பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அக்காரவடிசில்

3

அசப்பியம்




அக்காரவடிசில் = சர்க்கரைப் பொங்கல்
அக்கி = தீ, கண்
அக்கிரதாம்பூலம் = முதல் தாம்பூலம்
அக்கிரம் = நுனி, முதன்மை
அக்கினிமூலை = தென்கிழக்கு மூலை
அக்கு = கண், உருத்திராக்கம், எலும்பு, சங்குமணி, பலைகறை, எட்டிமரம், உரிமை
அக்குரோணி = 21870 யானை, 65610 குதிரை, 21870 தேர், 109350 காலாள் கொண்ட சேனை
அங்கசன் = மன்மதன் மகன்
அங்கணம் = சலதாரை, சேறு, முற்றும், உள் அறை, விடம்
அங்கணன் = அருகன், சிவன்
அங்கணி = பார்வதி, காளி
அங்கண் = அவ்விடம், தாட்சண்யம்
அங்கதம் = தோள் அணி, பழிச்சொல், மார்பு, பொய், பாம்பு, யானை உணவு
அங்கம் = உடம்பு, உறுப்பு, எலும்பு, கட்டில், ஒரு தேசம்
அங்கயற்கண்ணி = மீனாட்சி
அங்கரக்கா = மெய்ச்சட்டை, உடற் கவசம்
அங்கலாய்த்தல் = இச்சித்தல், துக்கித்தல்
அங்கனை = பெண்
அங்காடி = கடைவீதி, கடை
அங்காத்தல் = வாய் திறத்தல்
அங்கி = அக்கினி, சட்டை
அங்கிதம் = தழும்பு, அடையாளம்
அங்கிரி = கால்
அங்குட்டம் = பெருவிரல்
அங்குரம் = முளை, தளிர், குருதி, நீர், மயிர், நங்கூரம்
அங்குலி = விரல், மோதிரம், யானைமணி, புருவமத்தி
அங்கை = அழகிய கை, உள்ளங்கை
அசகசாந்தரம் = ஆட்டுக்கும் யானைக்கும் உள்ள பேதம்
அசகம் = மலையாடு
அசகாய சூரன் = வேறு ஒருவர் உதவியில்லாமல் பகைவரை வெல்லும் பலம் உள்ளவன்
அசதியாடல் = நகையாடல்
அசபை = ஒரு மந்திரம்
அசப்பியம் = சபைக்குத் தகாத வார்த்தை