பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பு

86

எஃறுதல்


என்பு = எலும்பு, உடம்பு, என்புக்கூடு என்று கூறுதல்
என்மர் = என்று சொல்வர், என்று சொல்பவர்
என்மனார் = என்று சொல்லுவர்
என்றவன் = சூரியன்
என்றிசினோர் = என்று சொன்னார்
என்று = சூரியன், எந்நாள்
என்றூழ் = கோடைக்காலம், சூரியன், வெயில்
என்னணம் = எவ்வண்ணம்
என்னர் = எத்தகையினர், சிறிதும்
என்னல் = என்று சொல்லுதல்
என்னன் = எவ்வியல்பினன்
என்னாங்கு = என்னிடத்து
என்னாதி = எப்படி வாழ்கின்றாய், என் செயக் கடவாய்
என்னும் = சிறிதும், யாவும்
என்னே = ஓர் அதிசய இரக்கச்சொல்
என்னை = என் தந்தை, யாது என் தலைவன்
என்னோ = என்னே
எஃகம் = ஆயுதம், கூர்மை; வேல், வாள், சூலம், நுதி, சக்கரம், ஈட்டி
எஃகல் = எஃகுதல், அவிழ்தல், எதிர்தாக்கல், நீளல், மேலே வாங்கல், எட்டுதல்
எஃகு = உருக்கு, ஆயுதப் பொது, கூர்மை, அறிவு, நுட்பம், வேல், கத்தி, மனஒடுக்கம்
எஃகுதல் = எட்டுதல், நெகிழ்தல், வளைவு, உதைத்து ஏறுதல், நிமிர்தல், எழும்புதல், ஆராய்தல், பஞ்சு பறித்தல், அவிழ்தல், பஞ்சு கொட்டுதல்
எஃது = எது
எஃறுதல் = அறுக்கப்படுதல், பன்னப்படுதல்