பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தமிழ் இலக்கிய வரலாறு


யும் இருக்கிறது. '1 இந்நூலினைத் தமிழில் படிக்க இயலாமல் ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து உள்ளத்தைப் பறி கொடுத்த ஆந்திர அறிஞர் திரு. சி. ஆர். ரெட்டி அவர்கள், இத்தகைய இலக்கியம் தம் மொழியில் அமைந்திருக்க வில்ைைல யாதலின், தமிழ் மொழிபால் பொறாமை கொள் வதாக வியந்து பாராட்டுகின்றார். 2 இதன் ஆசிரியர் இளங்கோவடிகள். 'குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த' என்ற பதிகத்தின் முதல் தொடர் இவரைச் சமணத்துறவி எனக் கூறுகிறது. மேலும் கதையின் இறுதிக் காதையான வரந்தரு காதையில், 'யானும் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி' | | | - - - - எனவரும் அடிகளில், ஆசிரியர், கதையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார். இதனால் இவர் செங்குட்டுவன் தம்பியார் என்பதும், தம் தமையனாரது அல்லல் நீங்க அரச பவியைத் துறந்த செம்மல் என்பதும் தெரியவருகின்றன. செங்குட்டு வன் சிறந்த சைவன், இளங்கோவடிகள் சமயமும் சைவமே என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் கூறுவர். தம் சமயக் கருத்துகளைக் கூறக் கவுந்தியடிகளைப் படைத்திருப்ப தால் இவரைச் சமணர் என்பர் சிலர். இவர் சமயம் எப்படி யாயினும் ஆகுக , சமய ஒருமைப்பாட்டினையும் அமைதி யினையும் கூற வந்தவர் இவர். 1. திரு. மார்க்கபந்து சர்மா, சிலப்பதிகார இரசனை 1. 195. 2. As an Andhra I envy Tamil its possession of two such poems as Silappadhikaram and Manimekhalai for which I can find no equivalents in Telugu literature. Even in translation they dominate the Soul like charm, what they be like in the original-C. R. Reddy, Forward to the Ancient Dravidians - by T. R. Sesha Iyengar. - p. xx