பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தமிழ் இலக்கிய வரலாறு


சிறந்த உரையும் உள்ளன. அடியார்க்கு நல்லார் உரையால் தான் அக் காலத்தின் இசை, கூத்துப் பற்றிய செய்திகளை நாம் அறிகிறோம். மணிமேகலை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பி யங்கள்' எனப்படும். இரண்டும் ஒரே காலத்தில் எழுந்தன என்பது சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் செய்தி. ஐம்பெருங் காப்பியங்களில் இவையிரண்டும் வைத்தெண்ணப் படுகின்றன. இந் நூற்கதை சிலப்பதிகாரக் கதையோடு தொடர்புடையது. எனவே, சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையில், 'மணிமே கலையோடு உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்' --- -- என்னும் தொடர் காணப்படுகிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. அவளே இக் கதையின் தலைவி. கண்ணகி வீரச்செல்வியாகவும் மரதவி அன்புச் செல்வியாகவும் காட்யளிக்கும் நேரத்தில், மணி மேகலை அறச் செல்வியாக- தவச்செல்வியாக காட்சியளிக் கிறாள். கதைத் தலைவியின் பெயரே காவியத் தலைப்பாய் அமைந்துள்ள தனை நாம் இங்குக் காண்கிறோம். "மக்கட் சமுதாயத்தை அல்வழி நீக்கி நல்வழிப்படுத்த எழுந்த ஒரு சீர்திருத்தக் காவியம் மணிமேகலை, இலக்கிய உலகில் இந் நூலின் தனிச்சிறப்பு இது. இல்லறக் குடியிற் பிறந்த வணிகப்பெண் நாடறிய ஆற்றல் காட்டிச் சிலப்பதிகாரத் தின் தலைவியாகின்றாள். இஃது ஓர் இலக்கியப் புரட்சி. பரத்தைத் தொழிலிற் கன்றிய சித்திராபதியின் பேர்த்தி மணிமேகலை காவியத் தலைவியாகின்றாள். இது முன்னை யினும் பெரும் புரட்சியன்றோ ?............பரத்தை யொழிப்