பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பல்லவர் காலம் (கி. பி. 600-850) - - - சங்கம் மருவிய காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி களப் பிரர் என்பார் கையில் சிக்கித் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தடை ஏற்பட்டது என்பதைக் கண்டோம். புறச்சமயத்தின ரான களப்பிரர்கள், இந்நாட்டின் பழஞ்சமயங்களான சைவ வைணவ சமயங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களைத் தோண்டிப் பார்த்த பொழுது சிவவழிபாடும், லிங்க வழிபாடும். இங்கு வாழ்ந்த மக்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்ற உண்மை புலனா கின்றதென்று ஸர். ஜான் மார்ஷல் (Sir John Marshali) என்பார் எழுதியுள்ளார். "இருக்கு வேத காலத்திற்கும் முற்பட்ட சமயம், சைவ சமயமாகும். என்பர் சிலர். அது போன்று திருமாலைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத் தில் 'மாயோன்' என்றும், 'பூவைநிலை' என்றும் கூறப்படு கின்ற சொற்களால் தெரிய வருகின்றன. மேலும் 'பாணினி சூத்திரப் பாடியத்தில் பதஞ்சலியார் வாசுதேவனைப் பரதெய்வமாகக் கூறுவர்; எனவே, வாசுதேவ வணக்கம் பாணினி காலத்திலேயே இருந்திருக்கிறது என்று கொள்ள லாம்.' இப்படிப்பட்ட பழம் பெருஞ் சமயங்களுக்கு அரசாங்க ஆதரவு அற்றுப் போய்விட்ட காரணத்தினால் இவை போற்றுவாரற்றுக் கிடந்தன. பௌத்த சமண சமயங்களின் செல்வாக்கே களப்பிரர்கள் காலத்தில் மிகுந் திருந்தது. ஆனால், இக்களப்பிரர்கள் ஆறாம் நூற்றாண்டின் 1. திரு. E. S. வரதராச ஐயர், தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 1 முதல் 1100 வரை) ப. 114