பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

115

பல்லவர் காலம் 115 இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.' அகப்பொருள் தழுவி அமைந்தது போன்ற அழகிய தொரு பாடல், இவர் பாடல்களில் ஒரு முடிமணியாய்த் திகழ்கின்றது ! 'முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத் தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!' இவர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குக் கொணர்ந்ததாகத் திருச்சிராப்பள்ளிச் சிவன் கோயில் கல்வெட்டொன்று கூறு கிறது. எனவே, இவரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டா கும். IT IT சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே அந்தணர் மரபில் பிறந்து, பிறந்த இடத்தின் வைதிகத்திருவும் வளர்ந்த இடத்தின் மன்னவர் திருவும் பொருந்த வளர்ந்து, திருவாரூ ரில் பரவை நாச்சியாரைக் காதலித்து மணந்து, பின்னர் வேளாளர் குலத்துதித்த சங்கிலி நாச்சியாரையும் கடிமனம் புரிந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர் இவர். இவருடைய வாழ்வில் துன்பங்கள் குறுக்கிடவில்லை. தம்பிரான் தோழர், நாவலூரர், வன்தொண்டர் முதலான III