பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

117

பல்லவர் காலம் 117 அரசன் பொருட்டுக் குதிரை வாங்கச் சென்ற பொழுது திருப்பெருந்துறையில் சிவனன்பு மீதூரப் பெற்று, வந்த வேலையினை மறந்து, அரசத் தொல்லைகளுக்கு உள்ளாகி, இறுதியில் இறைவன் இணையடி நீழலை அடைந்தார். இவரது வரலாறு, பிற்காலத்தில் எழுந்த புராணங்கள் பலவற்றால் புலனாகின்றது. இவர் இயற்றிய அரிய நூல் திருவாசகம். 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்' என்பது மூதுரை. வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகள், 'வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினி லே தேன்கலந்து பால் கலந்து செங்கனித்தீஞ் சுவைகலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்று, தம் ஆழ்ந்த அனுபவத்தை உரைக்கின்றார். திருவாசகத்தைச் சிவப்பிரகாசரும் புகழ்ந்து பாடியுள்ளார். | பிற நாட்டுப் பெரியோர்களையும் திருவாசகம் கவர்ந் துள்ளது. டாக்டர் போப்பு அவர்கள் இதனைப் பலபடப் பாராட்டி, ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். -- - - மணிவாசகப் பெருமான் இயற்றிய மற்றொரு நூல் திருக்கோவையார். கோவை நூல்களிலேயே சிறந்த நூல் இதுவேயாம் இது கட்டளைக் கலித்துறையான் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் நாட்டு மக்களின் உள்ளங்கவர்ந்த சமுதாயப் பாடல்களையும் பாடியுள்ளார் திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, உந்தி, திருத்தெள் ளேணம், திருப்பொற்சுண்ணம் ஆகிய பாடல்களை இவர் பாடியிருப்பது மக்கள் மனத்தைப் பிணிக்கும் நாட்டுப் பாடல் களுக்கு இவர் தந்த மதிப்பினைப் புலப்படுத்துகிறது. இவர்