பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

119

119 பல்லவர் காலம் பூதத்தாழ்வார் இவர் மாமல்லபுரத்தினர் என்று குருபரம்பரைகள் சறு கின்றன - 'மா மல்லை கோவல் மதிற்குடந்தை என்பரே ஏ வல்ல எந்தைக் கிடம்' என்று இவர் பாடியுள்ளது மேற்கூறிய கருத்தை வலியுறுத் தும். இவர் அன்பே தம் விளக்காக எண்ணிப் பாடி யுள்ளார்: 'அன்பே தகளியா யார்வமே நெய்யாக இன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்.' பேயாழ்வார் இவர், திருமயிலாப்பூரில் பிறந்து, திருமாலின் திருக் கோலம் கண்டு பாடிய பாடலைக் காண்க: 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்க னணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பா லின்று.' திருமழிசையாழ்வார் திருமழிசையிலே பிறந்த இவர், திருவல்லிக்கேணியிலே நெடுங்காலம் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் என்பர். இவருடைய சீடன் கணிகண்ணன் பாடிய வெண்பா அழகுடையது.