பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

121

பல்லவர் காலம் 121 ராஜாஜி கூறியிருக்கிறார். ஆயினும் பாடல்கள் முழுவதிலும் பெண்ணின் மன இயல்புக்கு ஒத்த உணர்ச்சிகளின் ஊற்றாக வடித்தெடுக்கப்பெற்ற இனிய எளிய இசைப் பகுதிகளைக் காணலாம். 'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ மருப்பொ சித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே." இந்தப் பாடல் வைணவர்கள் நாவிலே பயின்று வழங்கு கிறது. 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்று வாழ்ந்த இவர், 'சூடிக்கொடுத்த நாச்சியாராய்த்' திருமாலையே மணந்தார் என்பர். 'வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்' என்ற நாச்சியார் திருமொழிப் பாடல் இன்றி, வைணவர் களின் திருமணம் இன்றும் நிகழாது. இவர் பாடிய திருப் பாவை முப்பது பாடல்களும் மார்கழித் திங்களில் பாவை நோன்பு நோற்கும் பெண்கள் பாடிப் பரவசப்படுவதற்கும். தூய மனத்துடன் மாயவனைப் பரவுவதற்கும் பாடப் படுகின்றன. 'வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற இவரது பாடலின் தொடரைக் கொண்டு இவரை எட்டாம் நூற்றாண்டினர் என்பர் ஆராய்ச்சியாளர். -- II 1 ) திருமங்கையாழ்வார் இவர், திருக்குறையலூரில் கள்ளர் குடியிலே தோன்றிக் குமுதவல்லி என்னும் மங்கையை மணந்து, திருமாலடியார் திருத்தொண்டாற்றுவதில் த ம் கைப்பொருளெல்லாம்