பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

125

பல்லவர் காலம் 125 -- -- -- - - --- திருவித்துவக்கோட்டம்மான் மீது பாடிய திருமொழியில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் உவமை நலமும் கவிதைப் பெற்றியும் கவினுற அமைந்திலங்கக் காணலாம். பெண்ணின் கற்புநெறி போற்றி நாயகன் நாயகி பாவத்தை விளக்கும் போக்கின் ஓர் உயரிய வாழ்வியல் உண்மையினை - மேற்கோளினைக் குலசேகரர் பின்வரும் பாடலில் விளக்கி யிருக்கக் காணலாம் : - 'கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்போல் விண்தோய் மதிள் புடைசூழ் வித்துவக்கோட் டம்மா நீ கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே.' இராமாவதாரக் காதையில் பெரிதும் ஈடுபட்டவர் குலசேகரர். இவர் வரலாறாகக் கூறப்படும் செய்திகள் இதனை உணர்த்தும். இவர் திருக்கண்ணபுரத்தம்மானாம் இராகவனுக்குத் தாலாட்டுப் பாட்டுப் பாடுகின்றார். 'மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னிநன்மா மதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.' கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகளையும் இவர்தம் பாடல்க ளில் அழகுறப் பொதிந்துள்ளார். தேவகி, தசரதர் புலம்ப லாக இவர் பாடியுள்ள பாடல்கள் நெஞ்சினை நெக்குருகச் செய்வனவாகும். இவருடைய காலம். கி. பி. 9 ஆம் நூற்றாண்டாகும். நம்மாழ்வார் இவர் திருக்குருகூரிலே வேளாளர் குலத்திலே காரிமாற னுக்கும், உடைய நங்கைக்கும் திருமகனாராய் அவதரித்து, சடகோபன், பராங்குசன், குருகைக் காவலன், காரிமாறன், தமிழ் மாறன் என்னும் பெயர்களால் வழங்கப்பட்டு வந்தார். ஆழ்வார்களில் நம்மாழ்வாரே சிறந்தவர்