பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தமிழ் இலக்கிய வரலாறு

132 தமிழ் இலக்கிய வரலாறு - |- | - 1 கொங்குவேள் என்பதாகும், எனவே, நூலுக்கும் 'கொங்கு வேளிர் மாக்கதை' என்ற பெயர் வழங்குகிறது. ஆசிரியர் விசயமங்கலத்தினர்; வேளாண் மரபிலே வந்த சிற்றரசர். பல நல்ல கருத்தினை இவர் தம் நூலில் அமைத்துள்ளார். சான்றாக ஒன்று காணலாம்: 'அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை.' இந்நூலின் காலம் ஏழாம் நூற்றாண்டென்பர். | முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றி எழுந்த நூலாகும் இது. இன்று புறத்திரட்டில் நூற்றெட்டுச் செய்யுள்களே முத்தொள்ளா யிரப் பாடல்கள் என்று நமக்குக் கிட்டுகின்றன. இந்நூல் இனிய அழகிய பாடல்களைக் கொண்டு, புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் அழித்தல், வென்றி, கொடை, கைக்கிளை முதலியன பற்றிப் பரக்கக் கூறுகின்றது. அகப்பொருள் சுவையமைந்த பாக்களையும் இதிற் காணலாம். இந்நூலா சிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை . இந்நூல் சங்க மருவிய காலத்தில் எழுந்தது என்பர் சிலர். ஆனால், திரு. வையாபுரிப்பிள்ளை பல காரணங்களைக் காட்டி, இந்நூல் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுந்தது என்பர். திருக்கைலாய ஞானவுலா சுந்தர மூர்த்தி சுவாமிகளின் சம காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனார், இவ்வுலா நூலை இயற்றி னார். இந்நூல் 'ஆதியுலா' எனப்படும். தமிழில் தோன்றிய முதல் உலா இதுவே. பிற்காலத்து உலா நூல்களுக்கெல் லாம் வழிகாட்டியாயும் அமைந்தது இந்நூல். தவிர, சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக் கோவை, பொன்வண்ணத்தந்தாதி முதலியனவும் பாடி