பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலம்

141

11 சோழர் காலம் 141 நம்பியாண்டார் நம்பியும், வைணவப் பிரபந்தங்களை நாத முனிகளும் திரட்டித் தந்தனர். சோழர்கள் வழிவழிச் சைவர் களாய் வாழ்ந்து வந்த போதிலும், பிற மதத்தினரை வெறுத்து ஒதுக்கும் பண்பினைப் பெற்றிருக்கவில்லை. எனவே, பௌத்த சமணப் பெரியாரும் இலக்கிய இலக்கணத் தொண்டினைத் தொடர்ந்து செய்வாராயினர். இராசராச சோழன் நாகைப்பட்டினம் சூடாமணி விகாரத்தைப் புதுப் பித்துக் கட்டித்தர ஆதரவு நல்கியதையும் நாம் வரலாற் றிலே காண்கிறோம். "சமய எழுச்சியின் பயனாய்த் தமிழரிடம் சமுதாய உணர்ச்சி ஓங்கியது; ஆட்சி முறைகளும் திட்டங்களும் அபிவிருத்தி அடைந்தன; சமுதாய வாழ்வு சுதந்தரத்துடன் இயங்கியது: சத்திரங்கள் சாவடிகள் எழுந்தன; கோயில்கள் தோன்றின; நம் கோயில்களைக் 'கல்லிலே செதுக்கிய காவியம்' என்பர். பழங்கால நாகரிகத்தைச் சங்க நூல் களிலே காண்பது போல, இடைக்காலக் கலைவளத்தைக் கோயில்களிலே காணலாம். இவைகளைப் போன்ற மகத் தான கல் கட்டடங்கள் உலகிலே வேறு எந்த நாட்டிலும் இல்லை. சிற்ப நூலின் அற்புதமாய் இவை திகழ்கின்றன. இவைகளை எளிதில் ஆக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த மூதாதையரது சமயப் பற்றைப் போற்றாமல் இருக்க இயலாது" என்று தமிழ்ப் பெரியார் ஒருவர் கூறுகிறார். உண்மையில் இந் நூற்றாண்டுகளிலே தஞ்சைப் பெரிய கோயில் இராசராசனால் கி.பி. 1012-இல் கட்டப்பட்டது. பழைய கோயில்களில் சைவத் திருமுறைகள் ஓதப்பட்டன. அதற்குச் சோழ அரசர் மானியங்கள் வழங்கினர்; நிவந்தங் களை ஏற்படுத்தினர். இச் செய்திகளை எல்லாம் நாம் கல்வெட்டுகள் கொண்டு தெளியலாம். - - 11 || ப இலக்கியத்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பெருங்கவிஞர்களான கம்பரும் சேக்கிழாரும் இக்காலத்தே வாழ்ந்தனர். சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. இராசராச