பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலம்

143

14. சோழர் காலம் வளையாபதி புறத்திரட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் அறுபத்தாறு பாடல்கள் தவிர, இந்நூல் முழுமையும் இன்று நமக்குக் கிட்டவில்லை. உரையாசிரியர்கள் உரையிலும் மேற் கோளாகச் சில பாடல்கள் கிட்டுகின்றன. அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய பாடலொன்றில், 'துக்கந் துடைக்கும் துகளறு காட்சியர் நிக்கந்த வேடத்து இருடி கணங்களை' என வருவது கண்டு. இஃது ஒரு சமண நூல் என்பர். குறட் கருத்துகள் பல இந்நூலில் காணப்படுகின்றன. குழந்தைச் செல்வத்தின் சிறப்பை, 'பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத் துறையிலா வனச வாவித் துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே' என்னும் பாடல் தெரிவிக்கின்றது. நூலாசிரியரைப் பற்றிய குறிப்புத் தெரியவில்லை. வளையாபதி கதை வைசிய புராணத்தின் முப்பத்தைந்தாவது அத்தியாயத்தில் கானப் படுகிறது. குண்டலகேசி இந் நூலின் வரலாறு பௌத்தக் கதையாகிய தேரிகாதையின் 46 ஆம் காதையாய் அமைந்துள்ளது; வைசிக புராணத்தின் 34 ஆம் அத்தியாயம், கதைத் தலைவியின் வரலாற்றினைக் கூறுகிறது : இந் நூலை இயற்றியவர் நாதகுத்தனார் என்பவர். 'குண்டலகேசி விருத்தம்' என்றும் இந் நூலுக்குப் பெயருண்டு தர்க்க நூலாயும் இந்நூல் திகழ்வதோடு, பிற சமயக் கருத்துகளையும் தாக்குகிறது.