பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தமிழ் இலக்கிய வரலாறு

சமண சமயக் கொள்கையினைப் பின்வரும் பாடல்

தெரிவிக்கிறது : - 'மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சி: ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயா தொழுகுத லொழுக்கம் மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் 'என்றான்' இந்நூலுக்கு நச்சினார்க்கினியரின் அரிய உரை உள்ளது. இந்நூலின் கதை, வடமொழியில் அமைந்துள்ள சக்ர சூளாமணியையும், கத்திய சிந்தாமணியையும் தழுவி யது. வடமொழி ஆசிரியர் வாதீப சிம்மன் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். 'வண்பெரு வஞ்சிப் பொய்யா மொழி புகழ் மையறு சீர்த்தி திருத்தகு முனிவன்' என்னுந் தொடரால் அறியலாகும் 'பொய்யாமொழி' எனும் சத்திய வாக்கியன், கங்க ராஜ்யத்தைக் கி. பி. 908 முதல் 950 வரை ஆண்டவன். எனவே, திருத்தக்க தேவர் கி. பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர். நரிவிருத்தம் என்ற நூலினையும் திருத்தக்க தேவர் தம் குருநாதர் கட்டளைப்படி இயற்றியுள்ளார். இந்நூல் இளமை, செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமை யினைக் கூறுகிறது; கொலை, களவு, கோபம், ஈயாத்தன்மை , பொய் புகறல், புலால் உண்ணல் முதலிய புன்மைச் செயல் களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறது. சிந்தாணியினைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு. வி. க, பின்வருமாறு கூறியுள்ளார். "ஜைனத்திற்கு நாட்டில்