பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

157

 உரிச்சொல் நிகண்டு

வெண்பாவால் அமைந்துள்ள இந்நூலை இயற்றியவர் காங்கேயர் என்பவர், 'சலாம்' என்று இந் நிகண்டில் இடம் பெற்றுள்ள சொற்கொண்டு. இந்நூல் அருணகிரிநாதர் காலத்திற்குப் பிற்பட்டது எனலாம்.

கயாதர நிகண்டு

கயாதர முனிவரால் இயற்றப்பட்ட இந்நூல் இனிய கட்டளைக் கலித்துறையான் இயன்றது. இந்நூல் இதற்கு முன் எழுந்த நிகண்டுகளின் செய்திகளையே கொண்டு விளங்குகிறது.

ஒளவையார்

கி. பி. 1594 இல் சிதம்பரம் இரேவண சித்தர் இந்நூலை இயற்றியதாகக் கூறுவர். இந் நூலாசிரியர் பல சைவப் புராணங்களையும் இயற்றியுள்ளார்.

ஆசிரிய நிகண்டு

காலத்தால் பிற்பட்ட இந்நிகண்டினை இயற்றியவர் செஞ்சியை அடுத்த ஊற்றங்காலிற் பிறந்த பாவாடைவதே்தியார் குமாரர் ஆண்டிப்புலவர் என்பர் நன்னூலுக்கு இவர் உரை இயற்றியதாகத் தெரிகிறது. ஆனால், அவ்வுரை கிடைக்கவில்லை.

பெரும்புலவர்கள்

ஒளவையார்

அறிவிற் சிறந்த ஒளவை பிராட்டியார் பெயர் நாடறிந்ததொன்று. பல கதைகள் இவரைக் குறித்து வழங்குகின்றன. பல்வேறு காலங்களில் பல்வேறு ஒளவையார்கள் வாழ்ந்தார்