பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழ் இலக்கிய வரலாறு

உலாவின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் விளங்க உரைக்கப்பட்டுள்ளது.

'பாட்டுத் தலைவன் உலாப்புற இயற்கையும்
ஓத்த காமத் தினையாள் வேட்கையும்
கலியொலி தழுவிய வெள்ளடி யியலால்

திரிபின்றி நடப்பது கவிவெண் பாட்டே'

எனப் பன்னிரு பாட்டியிலும்,

'திறந்தெரிந்த பேதைமுத லெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்று - அறைந்தகலி

வெண்பா வுலாவாம்'

என வெண்பாப் பாட்டியலும்,

'குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்
கூறியவன் மறுகணையக் காதல் கூரேழ்
எழிற்பேதை பதினொன்று பெதும்பைபதின் மூன்று
இயன்மங்கை பத்தொன்பான் மடந்தை யையைந்
தழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பா
னாம் வயது பேரிளம்பெண் முதலா யுள்ளோர்
தொழவுலாப் போந்ததுலாத் தலைவன் போக்குத்
தொடை யெதுகை யொன்றி லின்ப மடலாய்ச்

சொல்லே'

எனச் சிதம்பரப் பாட்டியலும் உலாவின் இலக்கணம் கூறுகின்றன

இறைவன் திருவுருவோ, நாடாளும் மன்னனோ. ஞானசிரியரோ, யானை, குதிரை, தேர் முதலியவற்றுள் யாதானும் ஓர் ஊர்தியில் அமர்ந்து, உடன் வருவோர் சூழ, மங்கல இசைக் கருவிகள் ஒலிக்க, வீதிகளில் உலாவருவதாகவும், அப்பொழுது, பேதை, பெதும்பை மங்கை, மடந்தை. அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் உலா வரும் தலைவனைக் கண்டு, அவரவர் மன