பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

183


காசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்' என்பனவாம்.

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

திருவுந்தியார்

சிவஞான போதத்திற்கு முன்னர்த் தோன்றிய இந்நூலின் ஆசிரியர், திருவியலூர் உய்யவந்த தேவர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய இந்நூல் சிவஞான போதம் போன்று சைவ சித்தாந்தக் கருத்துகளை நிரல்படக் கூறாது, 45 செய்யுள்களில் ஆசிரியர் தம் மனத்தில் தோன்றிய உணர்ச்சி அனுபவங்களைக் கூறியுள்ள முறையில் அமைந்துள்ளது.

திருக்களிற்றுப்படியார்

அறுபத்துமூன்று நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில செய்திகள். அவர் தம் வல்வினை மெல்வினை இரண்டனையும் விளக்கும் போக்கில் இந்நூல் அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார். திருக்குறள் மேற்கோள் இந்நூலில் சைவ சமயக் கருத்தை விளக்க எடுத்தாளப்பட்டுள்ளன. திருவுந்தியாரின் காலமே இந்நூலின் காலமுமாகும்.

சிவஞான போதம்

பதினான்கு சைவசித்தாந்த நூல்களிலும் இதுவே தலைமை வாய்ந்தது. பன்னிரண்டு சூத்திரங்களையும், முப்பத்தொன்பது அதிகரணங்களையும், எண்பத்தோர் எடுத்துக்காட்டு வெண்பாக்களையும் இந்நூல் தன்னகத்தே கொண்டு 'பதி, பசு, பாசம்' என்ற சைவ சித்தாந்த உண்மை