பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயக்கர் காலம்

217


என்பவர் இதற்கு உரை வகுத்துள்ளார். ஈழ நாட்டிலிருந்து வந்து திருவண்ணாமலையில் துறவு பூண்ட சிவஞான சுவாமிகள், சிவஞான சித்தியாரின் சுபக்கத்திற்கு ஓர் உரை இயற்றியுள்ளார்கள்.

துறைமங்கல மடமும் வீரசைவ மடமாய் விளங்கிச் சமயத்தொண்டு ஆற்றியது. இந்த மடங்களில் எல்லாம் கல்லூரிகளை நிறுவித் தமிழ் கற்பித்தனர். இதனால் தான் இலக்கிய இலக்கண நூல்கள் மக்களிடையே வாழ்ந்து வந்தன. புலவர்களும் தொடர்ந்து பெருகி வந்தார்கள் . சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்கின.

புலவர் சிலர்

இலக்கண விளக்கம் என்னும் நூலினை இயற்றியவர் வைத்தியநாத நாவலர். இவர் திருவாரூரினர். தமிழின் ஐந்திலக்கணங்களையும் கூறும் இலக்கண விளக்கம், 'குட்டித் தொல்காப்பியம்' என்று வழங்கப்படுகின்றது. இந்நூலுக்கு உரையையும் இவரே எழுதியுள்ளார். சோணாட்டில் மாதை என்னும் ஊரிலே பிறந்த திருவேங்கடநாதர், 'பிரபோத சந்திரோதயம்' என்னும் வேதாந்த நூலை நாடக நூலாக்கினார். ஆழ்வார் திருநகரியிலே வாழ்ந்த சுப்பிரமணிய தீட்சிதர் தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்ற கொள்கையுடைவராய், 'பிரயோக விவேகம்' என்னும் நூலினைச் செய்தார். வடமலையப்பப் பிள்ளையின் காலத்தவரான வென்றி மாலைக் கவிராயர் திருச்செந்தூர்ப் புராணம் பாடினார். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரசை வடமலையப்பப் பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு, திருக்குருகூர்ச் சிறிய ரத்தினக் கவிராயர் புலவராற்றுப்படையினை இயற்றினார். பதினேழாம் நூற்றாண்டில் இருவர் பெரும்புலவர் தோன்றினர். ஒருவர், சைவசமயத்தின் பெருமையினை