பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

தமிழ் இலக்கிய வரலாறு


மொழி பெயர்த்தனர்; தமிழ்ச் சொற்கோவையினை மனப்பாடம் செய்யும் பழைய பழக்கத்திற்கு 'அகராதிகளையும் சதுரகராதிகளையும் இயற்றி முற்றுப்புள்ளி வைத்தனர்; இயற்கை, விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகளை வரைந்தனர்; தமிழறிந்த அறிஞர்களைத் தமிழ் நூல்கள் வெளியிடத் தூண்டினர்; மொழி, இலக்கியம், இலக்கணம் இவைகளை நுணுகி ஆயும் திறனுக்கு வழி காட்டினர்; எல்லோரும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் ஒரு மொழி அமைந்திருப்பது நல்லதன்று என்று கூறி, உரைநடை இலக்கியம் தங்களுக்கென்று இல்லாதவர்கள் சமுதாயம், ஒழுங்கு, சமயம், அரசியல், பொருளாதாரம் முதலிய துறைகளில் முன்னேற முடியாதென்றும் எடுத்துக் காட்டினர். அம்மட்டோடு அமையாது, நவீனத் தமிழ் உரைநடையினைப் பேசவும் எழுதவும் படிக்கவும் ஆனதொரு பழக்கத்தினைக் கற்பித்தனர். இவ்வாறு ஐரோப்பியர்களால் விளைந்த நன்மைகளையெல்லாம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கி மறைந்த சற்குணர் அவர்கள் விரிவாகக் கூறியுள்ளார்.[1]

இந்தியாவிலுள்ள மொழிகளுள் உரைநடை நூல் முதன் முதல் தோன்றிய பெருமை நம் தமிழ் மொழியினையே சாரும். அம்பலக் காட்டில் அச்சுப் பொறியினை அமைத்து அதன் பயனாய்க் ‘கிருத்துவோபதேசம்’ என்னும் தமிழ் நூல் கி.பி. 1577இல் வெளியாயிற்று.[2] மாறுபட்ட கருத்தும்


  1. Sri S. D. Sargunar, B.A. Foreward to Kirithavamum Thamizhum by Mayilai Seeni Venkatasamy, P. XII & XIII.
  2. In the very first book ever-printed in Tamil characters at Ambalakadu on the Malabar Coast. In 1577 or Language of book is styled Malabar' the Tamil. Dr. Caldwell's-A Comparative Grammar of the Dravidian family of Languages, P.8.