பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

தமிழ் இலக்கிய வரலாறு


கள் வெளிவந்துள்ளன. இவரது 'எழில் விருத்தம்' தனிச் சிறப்புப் பெற்ற நூல். இதில் விருத்தப்பா வகைகளின் இலக்கணத்தைப் புலப்படுத்தி அவற்றிற்கு இலக்கியமும் அமைத்துள்ளார்.

பாரதிதாசனின் பரம்பரையில் தோன்றிக் 'கவியரசர்' என்னும் சிறப்பு விருது பெருமளவு கவித்தொண்டாற்றியவர் கவிஞர் முடியரசன். தமிழாசிரியர் பணியோடே தமிழ்த்தாய்க்கும் தொண்டாற்றுகிறார். கவியரங்கங்களில் கலந்து கொண்டு சிறப்புப் பெற்றார். இவருடைய பாடல்கள் 'முடியரசன் கவிதைகள்' என்னும் நூலாக வெளிவந்துள்ளன. கவிதைக்காக இவர் தமிழக அரசின் பரிசு பெற்றுள்ளார். தமிழர்கள் விழாக்களில், செயல்களில் தமிழில்லையே என்று கவிஞர் முடியரசன் ஏங்குவதைப் பாட்டிலே தீட்டிக் காட்டுகிறார்.

'மணவினையில் தமிழுண்டா? பயின்றார் தம்முள்
வாய்ப் பேச்சில் தமிழுண்டா? மாண்ட பின்னர்
பிணவினையில் தமிழுண்டா? ஆவ ணத்தில்
பிழையோடு தமிழுண்டு; கோயில் சென்றால்
கணகணவென் றொலியுண்டு; தமிழைக் கேட்கக்
கடவுளரும் கூசிடுவார்; அந்தோ ! அந்தோ !
அணுவளவும் மொழியுணர்ச்சி யில்லா நாட்டில்

ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வ தெங்கே?'

'சுரதா' என்ற பெயர் சுப்புரத்தின தாசன் என்பதன் சுருக்கமாகும். இவர்தம் இயற்பெயர் இராசகோபாலன். பிறந்தஊர் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள பழையனூர். பிறந்த ஆண்டு 1921. சீகாழி அருணாசல தேசிகர், மெய்யக் கோனார் முதலியோரிடம் யாப்பிலக்கணம் பயின்றவர் இவர். ‘வழுவாத ஒழுக்கமும், வன்மையான தன்னம்பிக்கையும், சிறந்த நூலறிவும் கொண்ட இவருக்கு. மிகவும் பிடித்தது இலக்கியம் சார்ந்த பேச்சும், பழைய நால்களைத் தேடித் தேடி வாங்கிச் சேர்ப்பதும் ஆகும்.’ சிந்தனையும்