பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழ் இலக்கிய வரலாறு


‘முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்’

என்ற பாடலில் புலப்படுகிறது. புன்னை மரத்தைத் தன் தமக்கையாக எண்ணி, அதனெதிரில் தன் காதலனொடு பேசுவதற்கு நாணிய தலைவியை நாம் நற்றிணையில் காண்கின்றோம். தலைவன் பிரிவால் தலைவி உயிர் துறத்தற்கு அஞ்சவில்லை; ஆனால், ‘மறுபிறப்பில் மறந்து விடுவேனோ!’ என்று கலங்குகின்றாள்.

‘சாதல் அஞ்சேன் அஞ்சுவன் சாவில்
பிறப்புப்பிறி தாகுவது ஆயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.’

தலைவன் பிரிந்த நாளைத் தலைவி சுவரிலே கோடிட்டு எண்ணுவதும், பல்லி காதலர் வரவைக் கூறுவதாக நம்பு வதும், காற்பந்து விளையாடுவதும் மகளிர் வாழ்விலே காண்கிறோம். இரும்பு காய்ச்சிய உலையிலே கொல்லன் பனை மடலில் உள்ள நீர் தெளித்து நெருப்பை அணைப்பது முதலான செய்திகளையும் அறிகிறோம்.

குறுந்தொகை

இது ‘நல்ல குறுந்தொகை’ எனப் பாராட்டப்படும் சிறப்பினைப் பெற்றது. தொகை நூல்களிலேயே முதன் முதலில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுவது. நான்கடிச் சிற்றெல்லையையும் எட்டடிப் பேரெல்லையையும் உடைய அகவற்பாக்களைக் கொண்டது. அகப்பொருளாலும் அடியளவாலும் நோக்கப்பட்டு. இது பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது. பாடிய புலவர்கள் இருநூற்றைவர். பிற்கால இலக்கிய இலக்கண உரையாசிரியர்கள், குறுந்தொகைப் பாடல்களையே மற்றத் தொகைநூற் பாடல் களைவிடப் பெரிதும் எடுத்தாண்டிருக்கிறார்கள். முதல் 380 பாட்டுகளுக்குப் பேராசிரியரும், இறுதி இருபது பாட்டு களுக்கு நச்சினார்க்கினியரும் உரை கண்ட்மை தெரிய -