பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

73


பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக

நகுமே தோழி நறுந்தண் காரே!'

- குறுந்-125

சங்கப் பாடல்களில் ஓசையினிமையினைக் காணலாம் . சான்றாகத் திருமுருகாற்றுப்படையின் இறுதி அடிகள்,

'இழுமென இழிதரு மருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே!'

என முடிந்துள்ளன. தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான 'ழகரம்' ஈரடிகளில் நான்கிடங்களில் வந்து நல்ல ஓசையினைத் தருகின்றது.

தமிழ் மக்களின் வாழ்வு புகழ் நிறைந்த பெருவாழ்வாய்த் துலங்கியது.

'புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்!'

- புறம். 182

'மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே.'

-புறம். 165

என்ற புறப்பாக்கள் அவர் தம் புகழ் வாழ்வினை வெளிப் படுத்துவன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளம் பட்டினப்பாலையில் பின்வருமாறு பேசப்படுகின்றது.

'நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றி உருட்டும்

முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்.'

- பட். 22-25

தமிழகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வளமுற நிகழ்ந்தன. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,