பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழ் இலக்கிய வரலாறு


திருக்குறள்

'வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்துப்

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.'

என்று பாரதியாரும்,

"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ?'

என்று மற்றொரு புலவரும் பாடினர். தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாய்த் தோன்றியவர் திருவள்ளுவர். 'திருவள்ளுவர் பிறப்பு வளர்ப்பு முதலியவற்றைப் பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிட்டவில்லை. அவரது வரலாறு பலவாறு பகரப்படுகிறது. இந்நாளில் வழங்கிவரும் அவர்தம் வரலாறுகளெல்லாம் புனைந்துரைகளே திருவள்ளுவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், அறவோர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன" [1] என்று, மறைந்த தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

புலவர் தம் வாழ் நாளிலேயே புகழ் பெறுதல் என்பது அரிது: அதிலும் தம்மோடு ஒத்துத் தம் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இடையில் ஒருசேரப் புகழ் பெறுதல் என்பது அரிதினும் அரிது. அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் இவரைப் பாராட்டிய பாடல்களே திருவள்ளுவமாலையில் அமைந்துள்ள செய்யுள்கள் என்பர்.

திருவள்ளுவர் காலத்திற்குப் பின்னர் வந்த புலவர்களும் அவர் கூறிய கருத்துகளையும், தொடர்களையும் பொன்னே போலப் போற்றித் தங்கள் நூல்களில் கையாண்டுள்ளார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாய்மொழி, சிந்தாமணி,


  1. திரு. வி. க, அவர்கள், டாக்டர் மு. வ. அவர்களின் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், அணிந்துரை, ப. 8.