பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 2. இன்னா நாற்பது இது, கடவுள் வாழ்த்து உள்பட நாற்பத்தொரு வெண் பாக்களையுடைய ஒரு நீதி நூல். இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் இன்னது இன்னது துன்பம் பயக்கும் என்று கூறுவதால், இஃது இன்னாநாற்பது என்னும் பெயர் பெறுவ தாயிற்று. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ; ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினைத் தன்பாற் கொண்டு விளங்குவது ; எல்லா மக்கட்கும் உறுதிபயக்கும் பொது நீதிகளையும் உண்மைகளையும் எடுத்துக் கூறுவது. இதன் ஆசிரியர் கபிலர் என்னும் பெய ரினர் ; கள்ளுண்ணாமையையும் புலாலுண்ணாமையையும் தம் நூலில் மூன்று பாடல்களில் வற்புறுத்திக் கூறியுள்ள இவ் வாசிரியர், வேள் பாரியின் உற்ற நண்பரும் கடைச்சங்கப் புலவருமாகிய கபிலர் 1 அல்லர் என்பது தேற்றம். எனவே, இவர் அப்பெயருடன் பிற்காலத்தில் நிலவிய வேறொரு புலவர் ஆவர். இவர் நூலை நுணுகி யா ராயுங்கால், கடைச்சங்கம் அழிந்த பிறகு கி. பி. நான்காம் நூற்றாண்டில் சமண் சமயத் தினரின் செல்வாக்கு நம் தமிழகத்தில் காலத்தில் இவர் இருந்திருத்தல் வேண்டுமென்பதுமனாகின்றது.. இவர் துன்பின் மூலங்களை ஆய்ந்துணர்ந்து - மாத்திரம் தம் நூலில் தொகுத்துக் கூறியுள்ளமைக்குக் காரணம், அவற்றை மக்கள் அறிந்து கொண்டு அவற்றினின்று நீங்கி இன்பம் எய்தல் வேண்டும் என்னுங் கருத்தினைத் தம் உள் ளத்திற் கொண்டமையே எனலாம். துன்ப நீக்கமே இன்பப் பேறாம் என்பது அறிஞர் எல்லோரும் உணர்ந்ததோர் உண்மையன்றோ ? - இவ்வாசிரியரும், தம் அனுபவத்தாலும் 1. ' மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும் அட்டான் நானாக் கொழுந்துவை யூன் சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுதி நட்டனை மன்னோ முன்னே " (புறம். 113 என்ற கபிலரது பாடலால் அவர்க்கு ஊனும் மதுவும் உண்ணுதல் உடன் பாடாதல் காண்க.