________________
இன்னா நாற்பது 33 ஆராய்ச்சியாலும் இவ்வுலகில் ' இன்னா' என்று கண்டவற்றை அவ்வப்படியே இன்னிசை வெண்பாக்களில் கூறிச் செல்லு கின்றனரேயன்றி அவற்றை யெல்லாம் ஒருமுறைப் படுத்தி அமைத்தாரில்லை. எனவே, ஒரே கருத்து வெவ்வேறு பாடல் களில் அமைந்து கூறியது கூறல் எனப்படுமாறு இருத்தலை இவ ருடைய நூலில் காணலாம். அதுபற்றி இவர் புலமைத் திறமை யும் அருளுடைமையும் இழுக்குடையனவா கா.. அக்கருத்தின் உயர்வுநோக்கி, அதனைப் பலரும் நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும் என்பதை வலியுறுத்தற்பொருட்டே அங்ஙனம் கூறி யுள்ளனர் என்று கொள்வது அமைவுடைத்து. இவர் தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமான், பலராமன், மாயோன், முருகவேள் ஆகிய நால்வரையும் குறித் துள்ளமையின், இவர் சமயக் கொள்கையில் கடைச்சங்கப் புலவராகிய -நக்கீரனாரைப்போல் 2 பொது நோக்குடையவர் ஆவர். எனினும், இவர் - முக்கட் பகவன் அடிதொழாதார்க் கின்னா' என்று சிவபெருமானை அப்பாடலில் முதலில் கூறி யிருத்தலால் சிவநெறியில் ஒழுகிய செந்தமிழ்ப் புலவரா தல் தெள் ளிது. இவர், பலதேவனையும் மாயோனையும் தனித்தனியாக, அக்கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டிருப்பது ஒன்றே, இவர் கடைச்சங்க காலத்திற்குப்பிறகு அதனை யடுத்துள்ள காலப் பகுதியில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத் தும் எனலாம். பதினோராந் திருமுறையில் காணப்படும் மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்ற நூல்கள் மூன்றும் பாடியுள்ள கபிலதேவ நாயனார் என்பவர் இக்காலப் பகுதிக்குப் பிறகு பல்லவர் ஆட்சிக்காலத்தில் கி. பி. எழாம் நூற்றாண்டிற்குப் 1. ' முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா சத்தியான் தாள் தொழா தார்க்கு ' (கடவுள் வாழ்த்து.) ஆசிரியர் நக்கீரனார் 56 ஆம் புறப்பாட்டில் இக் காற்பெருந் தெய்வங்களை யும் கூறியிருத்தல் காண்க. II-3