பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- 7. சிறுபஞ்சமூலம் இந்நூல் சிறப்புப்பாயிரப் பாடல்கள் இரண்டோடு நூற்று நான்கு பாடல்களையுடையது. ஒவ்வொரு பாடலும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் ஐந்தைந்து பொருள்களைக் கூறுகின் றது. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாகி மக்கள் உடற்பிணியைப் போக்கி நலம்புரியும் என்பது மருத்துவ நூலில் காணப்படுவதோர் உண்மையாகும். அவ்வைந்தையும் மருத்துவ நூல் வல்லார் சிறுபஞ்சமூலம் என்று கூறுவர். அவற்றைப் போல் ஒவ்வொரு வெண்பாவிலும் சொல்லப்பட்டுள்ள ஐந்தைந்து பொருள்கள் கற்போரின் உள்ளப் பிணியாகிய அறியாமையை நீக்கி நன்னெறியில் ஒழுகச் செய்து இம்மை மறுமை இன்பங் களை அளிக்க வல்லனவாதலின், இந்நூல் சிறுபஞ்சமூலம் என்ற பெயரினை எய்தியது என்பது அறியற்பாலது. இந்நூல் பதி னெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாயிருப்பதோடு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினை யுடையதுமாகும். இதன் ஆசிரியர் காரியாசான் எனப்படு வர். இவர் சைன சமயத்தினர் ஆவர். இவருடைய ஆசிரியர் மாக்காயனார் என்னும் பெயரினர் என்பது இந்நூலின் இறுதியீ லுள்ள பாயிரப் பாடலால் நன்குணரக் கிடக்கின்றது.2 அவர், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் என்று அந்நாளில் வழங்கப் பட்டிருத்தலால், அப்புலவர் மதுரையம்பதியில் வாழ்ந்த ஒரு தமிழாசிரியராதல் வேண்டும். எனவே, அந் நகரில் கி. பி. 470-ஆம் ஆண்டில் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் நிறுவிய தமிழ்ச் 1. ' முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து-முழுதேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறு தியா வெண்பா வுரைப்பன் சில ' (சிறுபஞ்ச. கடவுள் வாழ்த்து) - * மல்லிவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய் நீக்கும் பாங்கினாற்-கல்லா மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான் ' (ஷ நூல், பாயிரப் பாடல்)