பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 தமிழ் இலக்கிய வரலாறு 14. ' வருந்தாதார் - வாழ்க்கை திருந்து தலின்று ' (பா. 175) 15. ' மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயால் கெடும்' (பா. 184) 16. ' அறிதுயில்-- ஆர்க்கும் எழுப்ப லரிது '(பா. 22 17. ' யார்க்கானும் - அஞ்சுவார்க் கில்லை யரண் ' (பா. 254) 18. ' சான்றோர் - கயவர்க் குரையார் மறைவு ' (பா. 229) 19. ' நிறைகுடம் நீர்தளும்ப லில் ' (பா. 243) 20. ' அணியெல்லாம் ஆடையின் பின் ' (பா. 271) 21. ' பாய்பவோ -வெந்நீரும் ஆடாதார் தீ' (பா. 293) 22. - திரையவித் தாடார் கடல் ' (பா. 317) 23. ' பெண்பெற்றான் அஞ்சான் இழவு ' (பா. 318) 24. * முதலிலார்க் கூதிய மில் ' (பா. 312) 25. ' மரத்தின்கீ ழாகா மரம் ' (பா. 311) 26. - உலகினுள்-இல்லதனுக் கில்லை பெயர் ' (பா. 319) 27. ' அறிமடம் சான்றோர்க் கணி ' (பா. 361) 28. ' தீநாள் திருவுடையார்க் கில் ' (பா. 84) 29. ' ஒருவர் பொறை இருவர் நட்பு ' (பா. 247) 30. ' பின்னின்னா. பேதையார் நட்பு ' (பா. 113) என்பன யாவரும் அறிந்து கோடற்குரியனவாகும். இனி, ' கூறுங்கால் இல்லையே -- ஒன்றுக்குதவாத ஒன்று' எனவும், ' எக்காலும் - செய்யா ரெனினும் தமர் செய்வர்'2 எனவும், - தாநட் டொழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா + யார் நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும் '3 எனவும் போதரும் இவருடைய கருத்துக்கள் தொல்லாசிரியன்மார் கருத்துக்களுக்கும் உலகியல் நிகழ்ச்சிகளுக்கும் முரண்பட்டு நிற்றல் போல் காணப்படினும் சிறுபான்மைபற்றி அவற்ரை: ஏற்றுக் கோடலில் இழுக்கொன்றுமில்லை என்றுணர்க. 1. பழமொழி, பா. 111, 2. பா. 109, 3. , பா. 14.