உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பழமொழி 47 இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அது பொழிப் புரையாக அமைந்தது. அதனைப் பதவுரையாக்கிக் கருத்துரையும் இன்றியமையாக் குறிப்புக்களும் மேற்கோளும் சேர்த்து, அதி காரங்களாகிய உட்பிரிவுகளும் வகுத்து ஆசிரியர் செல்வக்கேசவ ராய முதலியார் வெளியிட்டிருப்பது பெரிதும் மகிழ்தற்குரியது. அன்றியும், செந்தமிழ்ப் பத்திராசிரியராக நிலவிய காலஞ்சென்ற திரு. நாராயண ஐயங்கார் இந்நூலின் முதல் இருநூறு பாடல் களுக்குச் சிறந்த பேருரை ஒன்று வரைந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளியீட்டிருப்பது போற்றத்தக்கதாகும். அவ் வறிஞர் எஞ்சியுள்ள இரு நூறு பாடல்களுக்கும் தம் விளக்க உரையை எழுதாமல் காலஞ்சென் றமை மிகவும் வருந்துதற் குரியது. இந்நூல், தனக்குப் பிற்பட்ட புலவர் பெருமக்கள் பலர் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது என்பது அன்னோர் இயற்றி யுள்ள நூல்களால் அறியப்படுகின்றது. இதில் காணப்படும் பண்டைப் பழமொழிகளுள், 1. ' குலவிச்சை -கல்லாமற் பாகம்படும்' (பா. 21) 2. - கற்றலிற் கேட்டலே நன்று' (பா. 61) 3. ' உறற்பால-தீண்டா விடுதல் அரிது ' (பா. 62) 4. ' தமக்கு மருத்துவர் தாம் ' (பா. 56) 5. * கெட்டார்க்கு நட்டாரோவில் ' (பா. 59) 6. ' பழம்பகை நட்பாத லில்' (பா. 97) 7. ' காணா-ரெனச்செய்யார் மாணா வினை ' (பா. 102) 8. - தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை ' (பா. 118) 9. ' செல்வம்- தொகற்பால போழ்தேதொகும்' (பா.120) 10. ' இன்னாதே-பேஎயோடாயினும் பிரிவு ' (பா. 122) 11. ' திருவொடும் இன்னாது துச்சு ' (பா. 123) " என்செய்தாங் கென்பெறினும் - ஆகாதார்க்காகுவதில் ' (பா. 123) * தன் கண்ணிற்--கண்ட தூ உம் எண்ணிச் சொலல் ' (பா. 153)