பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 தமிழ் இலக்கிய வரலாறு லொன்றாலும் இவர் சமண சமயத்தினர் ஆவர் என்பது தெளியப்படும். எனவே, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமண முனிவராகிய வச்சிரநந்தி என்பவரால் மதுரைமாநகரில் நிறுவப் பெற்ற தமிழ்ச் சங்கத்தை ஆதரித்து வளர்த்துவந்தவர்களுள் இப்புலவர் தலைவரும் ஒருவராக இருத்தல் கூடும். அங்ஙன மிருப்பின், இவர் பாண்டி நாட்டிலிருந்த ஓர் அரசியல் தலைவ ராக இருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இவர் ஆசிரியர் திருவள்ளுவனாரைப்போல் தம் நூலைப் பால் இயல்களாக வகுக்கவில்லை. ஆயினும் இவரது நூல் சிறந்ததொரு நீதி நூல் என்பதில் ஐயமில்லை. இவர் சங்க நூல்களையும், சைவ வைணவ புராணங்களையும் இராமாயணம் பாரதம் ஆகிய இதிகாசங்களையும் சமயவேறுபாடு கருதாமல் பயின்றவர் என்பது, இவர் அவற்றில் காணப்படும் வரலாறுகளைத் தம் நூலில் ஏற்ற பெற்றியமைத்துப் பண்டைப் பழமொழிகளை விளக்கிக் காட்டுவதால் நன்கு துணியப்படும். அவ்வரலாறுகளுள் சில, இவர் நூலிலன்றி வேறு யாண்டும் காணப்படாத அருமையும் பெருமையும் உடையனவாயிருத் தல் அறியத்தக்கது. அவற்றைத் தக்க ஆதாரங்களில்லாமல் இவர் எடுத்துக் கூறமாட்டார் என்பது ஒருதலை. ஆகவே, அவ் வரலாறுகளுக்கு இவ்வாசிரியர் காலத்தில் சான்றுகள் இலக்கி யங்களிலாதல் வழக்காற்றிலாதல் இருந்திருத்தல் வேண்டும் எனலாம். பழமொழிகளையே நூல் முழுவதும் அமைத்து இயற் றப்பெற்ற நூல்களுள் மிக்க தொன்மைவாய்ந்தது இவருடைய நூலேயாகும். 1. பிண்டியி னீழற் பெருமா னடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறும்- கொண்டினிதா முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான் இன்றுறை வெண்பா விவை. (பழமொழி, தற்சிறப்புப்பாயிரப் பாடல்)