பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பழமொழி 45 யன், பாரி, 2 பேகன் 3 ஆகியோரின் வரலாற்றில் குறிக்கப் படுதற்குரிய சில செய்திகள் இந்நூலில் காணப்படுதல் அறியத் தக்கது. எனவே, இந் நூல் வரலாற்றாராய்ச்சியாளர்க்கும் பயன் படக்கூடியதோர் அரிய நூலாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல் களிலுள்ள மூன்று பெருநூல்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆசிரியர் முன்றுறையரையர் என்பார். இத் தொடரை நோக்குங்கால், இவர் முன்றுறை என்ற ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு குறுநில மன்னராயிருத்தல் வேண் டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவர் குறுநில மன்ன ரல்லராயின், அரையர் என்னும் பட்டம் பெற்ற ஓர் அரசியல் அதிகாரியாயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இவருடைய இயற்பெயர் யாது என்பது இப்போது புலப்பட வில்லை. அன்றியும் இவரது முன்றுறை என்னும் ஊர் எவ்விடத் தில் உள்ளது என்பதும் தெரியவில்லை. காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அது பாண்டிநாட்டில் உள்ளதோர் ஊர் என்று தாம் வெளியிட்ட பழமொழி நூலின் பதிப்புரையில் எழுதியுள்ளனர். ஆனால், அது பாண்டி நாட்டில் எவ்விடத்தில் எப்பெயருடன் இப்போது உள் ளது என்பதை அவ்வறிஞர் விளக்கினாரில்லை. அப்பெயருடைய ஊர் ஒன்று இந்நாளில் பாண்டிநாட்டில் உளதா என்பதே தெரியவில்லை. எனினும், முன்றுறை என்ற தொடரை நோக்கு மிடத்து, இவ்வாசிரியரது ஊர், கொற்கை முன்றுறை காவிரி முன்றுறை, திருமருத முன்றுறை, கழார் முன்றுறை, என் பவற்றைப்போல் தீர்த்தச் சிறப்புவாய்ந்து ஒரு பேராற்றங்கரை யில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு அறியக்கிடக்கின் றது. இவர் தம் நூலில் அருகக் கடவுளுக்கு வணக்கம் கூறி யிருத்தலாலும் இந்நூலில் காணப்படும் தற்சிறப்புப்பாயிரப் பாட பொற்கைப்பாண்டியன் தன்கையைக் குறைத்தது. (பா. 102) (a) பாரிமுல்லைக்குத் தேர் கொடுத்தது. (பா. 361) (6) பாரி மகளிரின் கொடைச்சிறப்பு. (பா. 171) பேகன், மயிலுக்குப் போர்வை கொடுத்தது. (பா. 361) .