பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6. பழமொழி இது கடவுள் வாழ்த்துட்பட நானூறு வெண்பாக்களை யுடைய ஒரு நீதி நூல். ஒவ்வொரு வெண்பாவிலும் இறுதியில் ஒவ்வொரு பழமொழி அமைக்கப்பெற்றுள்ள காரணம்பற்றி இந்நூல் பழமொழி என்னும் பெயர் எய்தியது. அப்பழமொழி கள் எல்லாம் பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தில் வழங்கி வந்தவை என்பதில் ஐயமில்லை. அப்பழமொழிகளின் துணை கொண்டு எத்துணையோ அரிய உண்மைகளும் நீதிகளும் இந் நூலில் இதன் ஆசிரியரால் தெள்ளிதின் விளக்கிக் கூறப்பட் டுள்ளன. சிறந்த நீதிநூல்களாகிய திருக்குறள், நாலடியார் என் பவற்றோடு ஒருங்குவைத்து எண்ணத்தகும் பெருமையுடையது இந்நூல் என்று கூறலாம். ' அவ்விரு நூல்களிலும் காணப் படாத அரிய உண்மைகள் சிலவற்றை இதன் ஆசிரியர் தம் நுண் ணறிவாலும் அனுபவத்தாலும் அறிந்து கூறியிருப்பது பெரிதும் பாராட்டற்குரியதாகும். தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் பண்டை நாகரிகத்தையும் அறிய விரும்புவோர், இந்நூலாசிரியரால் ' பண்டைப் பழமொழி' என்று எடுத்தாளப் பெற்றுள்ள எல்லாப் பழமொழிகளையும் நுணுகியாராய்ந்து பார்ப்பின் பல அரிய செய்திகள் புலப்படும் என்பது திண்ணம். அன்றியும், சேர சோழ பாண்டியருள் சிலரையும் கடையெழு வள்ளல்களுள் சிலரையும் பற்றிய செய்திகளும், இதிகாச புராணங்களில் சொல்லப்படும் சில கதைகளும் இந்நூலில் காணப்படுகின் றன. அவற்றுள் பல்யானைச் செல்கெழுகுட்டு வன்,1 மனுநீதிகண்ட சோழன்,2 தூங்கெயிலெறிந்த தொடித் தோட்செம்பியன்,3 சோழன் கரிகாலன்,4 பொற்கைப் பாண்டி 1. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கௌதமனார்க்கு வீடளித்தது. (பா. 31) 2. மனுநீதிகண்ட சோழன் கன்றூர்ந்த புதல்வனைத் தோால் ஊர்ந்த து (பா. 93" 3. சோழன் ஒருவன் தூங்கெயில் எறிந்தது. (பா. 49) 4. (a) கரிகாலன் நரைமுடித்து முறை செய்தது (பா. 21) (h) யானை கருவூரிற் சென்று கரிகாலனைக் கொணர்ந்தது. (பா. 62) (c) கரிகாலன் இரும்பிடர்த்தலையார் உதவியால் செங்கோலோச்சியது. (பா. 105