பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆசாரக்கோவை செய்யுளொன்று கூறுவது அறியத்தக்கது. இந்நூற் பெயரும் இதில் கூறப்படும் ஆசாரங்களும் இது வடமொழி நூல்தளை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்றிருத்தல் வேண்டும் என் பதை நன்கு வலியுறுத்துவனவாகும். இதன் ஆசிரியர் சிவபெரு மானுக்குத் தம் நூலில் வணக்கம் கூறியிருத்தலால் சைவ சமயத்தினர் என்பது தெள்ளிது. இவர் கி. பி. ஐந்தாம் நூற் ராண்டின் இறுதியில் விளங்கியவராதல் வேண்டும். இவர் தாம் எடுத்துரைக்கும் ஆசாரங்கள் பலவற்றை ' முந்தையோர் கண்ட முறை' எனவும், ' யாவருங்கண்டநெறி' எனவும், ' பேரறி வாளர் துணிவு' எனவும், - மிக்கவர் கண்ட நெறி' எனவும், ' நல்லறிவாளர் துணிவு' எனவும் உரைத்துள்ளமையால், அவை யனைத்தும் அறிஞர்கள் தம் அனுபவத்தாலறிந்துணர்த்திய உண் மைகள் என்பதும், அவர்கள் நூல்களை நன்கு பயின்று அவற் றைத் தொகுத்து இவர்தம் நூலில் கூறியுள்ளனர் என்பதும் வெளியாதல் காண்க. இவ்வாசிரியரது வாழ்க்கை வரலாறும் பிறவும் இக்காலத்தில் தெரியவில்லை. இவர், நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல் கூறல், எவ்வுயிர்க்கும் இன்னாதவற்றைச் செய்யாமை, கல்வி, ஒப்புரவாற்றல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் ஆகிய இவை எட்டும் ஆசாரங்கட்குவித்து என்று கூறியிருப்பது உணரற்பாலதாம். 1. - ஆசெயில் மூன்று மழித்தான் அடியேத்தி ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம் யாரும் அறிய அறனாய மற்றவற்றை ஆசாரக் கோவை யெனத்தொகுத்தான் தீராத் திருவாயி லாய திறல்வண் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியென்பான் ' (ஆசாரக் கோவை, சிறப்புப்பாயிரப்பாடல்)