பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறுபஞ்சமூலம் கூறியிருப்பது1 உண்ரற்பாலதாம். எனவே, ஓர் ஆசிரியனுடைய செந்தமிழ்ப் புலமையும் தூய விரிந்த உள்ளமுமே அவனது நூல் உலகில் என்றும் நின்று நிலவிச் சிறப்புறுவதற்கு ஏதுக்களாம் என்பது இவரது அரிய கருத்தாதல் காண்க. இவர் தம் நூலில் ' தானத்தாற் போகம் தவத்தால் சுவர்க்கமாம்--ஞானத்தால் வீடாகும் நாட்டு '2 என்றுரைத்துள்ளமையால் மெய்யுணர்தல் ஒன்றால்தான் வீடு பேற்றை எய்தலாம் என்பது இவரது உறுதி யான கொள்கையாதல் உணர்க. வென்று”3 என்எல் மறவாமல் பகன்றைக் வரும் தம் வாழ்நாளி, பொருள் பொதிந்த வாழ்க வெனவா லவர் பெருக்கம். ஒழுகுவோர் அறியத் இனி, இவ்வாசிரியர் கூறியுள்ள ' தான் பிறரால்-சாவ 'வென வாழான் சான்றோரால் பல்யாண்டும் - வாழ்க வெனவாழ் தல் நன்று '3 என்ற பொருள் பொதிந்த அறிவுரை ஒவ்வொரு வரும் தம் வாழ்நாளில் மறவாமல் கடைப்பிடித் தொழுகுவதற் குரிய சிறப்புடையதாகும். தோற்கன்றைக் காட்டிக் கறந்த பசுவின் பாலை நன்னெறியில் ஒழுகுவோர் உண்ணமாட்டார்கள் என்று இப்புலவர் பெருந்தகையார் ஒரு பாடலில் கூறியிருப்பது4 அறியத் தக்கது. தோற் கன்றைக் காட்டிப் பசுக்களைக் கறக் கும் வழக்கம், சென்னை போன்ற நகரங்களில் இக்காலத்தில் மிகுதியாக இருத்தலைக்காணலாம். இக்கொடுஞ் செயல்கள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்து வந்தன என்பது இவ்வாசிரியர் கூற்றால் நன்கறியப்படுகின்றது. எனவே, எந்தத் தீமையும் எந்தக் காலத்தும் நிகழ்தல் உலகியற்கை போலும். கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய இரு பேரறங்களையும் இவர் பல இடங் களில் வற்புறுத்திக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பொது வாகவே, சைன சமயப் பேராசிரியர் எல்லோரும் தம் நூல்களில் அவ்வறங்களைக் கூறாமல் செல்லார் என்பது ஒருதலை. இவ் வாசிரியர் பலி என்னும் சொல்லைக் குழந்தைகளுக்குக் கொடுக் கும் சோறு என்ற பொருளில் வழங்கியுள்ளனர். அதனைக் * குழவி 1. சிறு பஞ்சமூலம், பா. 12. பா. 36. 3. | பா, 68. 3 பா. 84. +