உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம் 11) யிலும் சொல்லப்பட்டுள்ளது.. ஆகவே, கடைச்சங்க நாளில் பாண்டி நாட்டில் ஒரு வற்கடம் தோன்றி அந்நாட்டு மக்களைப் பெரிதும் துன்புறுத்தியிருத்தல் வேண்டும் என்பது ஐயமின்றித் தெளியப்படும். அந்நாட்களில் சங்கப் புலவருள் பலர் தமிழகத்தில் பற்பல ஊர்கட்குச் சென்று, ஆங்காங்கு நிலவிய வள்ளல்களின் ஆதரவில் தங்கியிருந்திருத்தலும் இயல்பேயாகும். அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பெருங் கொடைவள்ளல் களையும் அரசர்களையும் புலவர் பெருமக்கள் நன்கறிந்திருந்தனர் என்பதற்கும் அவர்கள் புலமைத்திறத்தையும் பெருமையையும் அச்செல்வர்கள் தெள்ளிதின் உணர்ந்து போற்றியுள்ளனர் என் பதற்கும் பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான கடைச்சங்க நூல்கள் இன்றும் சான்றாக நிற்றல் காணலாம். எனவே, கடைச்சங்கப் புலவர்கள் வற்கடம் நிகழ்ந்த ஞான்று தமிழகத்தில் யாண்டும் ஆதரவுபெற்றுச் செவ்விதின் வாழ்க்கை நடத்தியமையில் சிறிதும் ஐயமில்லை. அவ்வற்கடம் நீங்கிப் பாண்டி நாடு செழிப்பெய்திய பின்னர், அந் நாட்டரசன் விரும்பிய வாறு சங்கப் புலவர்கள் மதுரையம்பதிக்குத் திரும்பிச் சென்று விட்டமை, அவ்வகப் பொருளுரையாலேயே உண்ரக்கிடக் கின்றது.2 வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த சங்கப் புலவருள் சிலர் இறந்துபோயிருத்தலும் கூடும். எனினும், எஞ்சியிருந்த புலவர்கள் பாண்டிவேந்தன் அழைப்பிற்கிணங்கி மதுரைக்குச் சென்று சங்கத்தில் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்திருத்தல் வேண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, வற்கட - மொன்றால் கடைச்சங்கம் முடிவெய்தியது என்று கூறுவது ஏற்புடைத்தன்று. . கடைச்சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பதை, அவர்கள் அந்நூற் சொற்பொருள்களைத் தாம் இயற்றிய செய்யுட்களில் ஆங்காங்கு அமைத்துப் பாடியிருத் 1. மணிமேகலை, பாத்திரமாபு கூறிய காதை, அடி 55, 56. 2. இறையனார் அகப்பொருள் உரை, (பவாகந்தர் பதிப்பு) பக்கங்கள் 8-11.