________________
22 தமிழ் இலக்கிய வரலாறு மொழிக்கு முதலில் இலக்கணம் வரைந்த காச்சாயனரும் தமிழ் நாட்டவரே என்பது அறியத்தக்கது.1 இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால முதல் ஏதிலார் ஆகிய களப்பிரரும் பல்லவரும் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றி அர சாண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும் பௌத்தம் சமணம் ஆகிய புறச்சமயங்களும் எத் துணை உயர்வெய்திப் பெருமையுற்றன என்பது நன்கு விளங்கும். ஆகவே, அவ்வயலாரது ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ் மொழிக்கு ஆதரவும் வளர்ச்சியும் இல்லாமற் போயின எனலாம். எனவே, அக்காலப் பகுதி தமிழ் மொழிக்கு ஓர் இருண்டாகால மாகவே இருத்தல் காண்க. இருண்டகாலத்தினும் சில தமிழ் நூல்கள் தோன்றியமை : வட்வேங்கட முதல் தென்குமரி வரையிலுள்ள பெரு நிலப்பரப்பு முழுவதும் பிறமொழியாளராகிய பல்லவரும் களப் பிரரும் அரசாண்ட காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவதற்குச் சிறிது வாய்ப்பு ஏற்பட்டமை மகிழ்ச்சிக்குரிய தொன்றாம். அக்காலப் பகுதியில் தமிழ் மொழிக்கு அரசாங்க ஆதரவு ஒரு சிறிதுமின்மை முன்னர் விளக்கப்பட்டது. எனி னும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சிவனடியார் சிலர், அக் காலப்பகுதியில் இருந்துள்ளனர். அத்தகைய பெரியோர்களுள் காரைக்கால் அம்மையார், திருமூலநாயனார் என்போர் குறிப் பிடத்தக்கவராவர். அவர்கள் இயற்றியுள்ள அற்புதத் திரு வந்தாதி, இரட்டை மணிமாலை, திருலாலங்காட்டு மூத்த திருப் பதிகங்கள், திருமந்திரம் ஆகிய நூல்கள் அந்நாட்களில் தோன்றி யவை என்பது ஐயமின்றித் துணியப்படும். அக்காலப்பகுதியில் சில நீதி நூல்களும் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் முதலில் நீதி நூல்கள் தனியாக எழுதப்பெற்ற காலம் 1. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration, Volume p. 245.