பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஐந்திணை ஐம்பது இருண்டெழுந்து, முருகவேளின் வேற்படையைப்போல் மின்னி, சிவபெருமானுக்குரிய மாலையாகிய கொன்றைப் பூக்கள் மலரும் படி வலமாக எழாநின்றன என்று தோழி கூற்றில் வைத்துக் கூறியிருப்பதை நோக்குமிடத்து, இவர் சமயக் கொள்கையில் பொது நோக்குடையவர் என்பதும் ஆனால், புத்த சமண சமயத் தினர் அல்லர் என்பதும் நன்கு புலனாகின்றன. இவரைப்பற்றிய பிறசெய்திகள் தெரியவில்லை. இவ்வாசிரியருடைய புலமைத்திறத்தையும் இவர் இயற்றி யுள்ள ஐந்திணை ஐம்பது என்ற நூலின் அருமை பெருமை களையும்,

  • சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக்- கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சுஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி' (பா. 38) “ கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழினோக்கி யுண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகங் கண்டன்னை யெவ்வம்யா தென்னக் கடல்வந்தென் வண்டல் சிதைத்ததென் றேன் ' (பா. 44)

என்னும் பாடல்களால் நன்கறியலாம். இந்நூலில் காணப்படும் சில உலகியல் உண்மைகள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கனவாகும். அவை,

  • மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் ஒற்கங் கடைப்பிடியா தார் ' (பா. 48)
  • அறிவ தறியு மறிவினார் கேண்மை நெறியே யுரையாதோ மற்று ' (பா. 23)
  • குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல்

வளியெறியின் மெய்யிற் கினிதாம்' (பா. 30) என்பனவாம்.