பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதற் பதிப்பின் முகவுரை சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தார் தமிழ் இலக்கிய வரலாறு ஒன்று சிறந்த முறையில் எழுத வேண்டுமென்று தமிழாராய்ச்சித் துறைத் தலைவர்க்குத் தெரி வித்தார்கள். அந்நாட்களில் அப்பகுதிக்குத் தலைவராயிருந்த டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M. A., Ph. D. அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் ஐவர்க்கும் அதனை அறிவித்து எழுதத் தொடங்குமாறு கூறிச் சில வரையறைகளும் செய்தார்கள். தொல்காப்பியர் காலமுதல் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியவுள்ள இலக்கிய வரலாற்றை முதலில் எழுதவேண்டும் என்பதும், அதனைச் சில பகுதிகளாகப் பிரித்து ஆராய்ச்சித்துறை ஆசிரியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எழுதவேண்டும் என்பதும், அவற்றுள் இன்னார், இன்னார், இன்ன இன்ன பகுதியை எழுதவேண்டும் என்பதும் அப்போது செய்யப்பட்ட வரையறைகளாகும். அதில் எனக்குக் கொடுத்த பகுதி, கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. 610 வரையிலுள்ள இருண்டகால இலக்கிய வரலாறேயாகும். இவ்விருண்டகாலப் பகுதியில் தோன்றிய இலக்கியங்களை உணர்ந்துகோடற்குத் தக்க ஆதாரங்களின்மை அறிஞர் பலரும் அறிந்ததே. எனினும், கடைச் சங்க காலத்திற்குப் பின்னர், தமிழ் நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் வடமொழியில் எழுதப்பெற்ற சில சைன நூல்களும், பாலிமொழியில் இயற்றப் பெற்ற சில பௌத்த நூல்களும், பிராகிருதத்திலும் வடமொழி யிலும் வரையப்பெற்ற சில செப்பேடுகளும் இக் கால நிலையை அறிந்துகொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டன. அன்றியும், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களிலும், பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியர்களின் உரைகளிலும் காணப்படும் குறிப்புக்களும், சில தமிழ் நூல்களின் காலங்களை உணர்தற்குத் துணைபுரிந்தன. தமிழ்நாட்டில் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல்தான் கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளமையால் , அந் நூற்றாண்டிற்கு