பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



திருமந்திரம் 79 செய்திகள் காலப்போக்கில் பல மாறுதல்களுக் குள்ளாதல் இயல்பேயாம். யில் கடுதுறைக் கோயிலின் இ வல்ல பெருஞ் சித் இந்நூலின் ஆசிரியர் திருமூலநாயனார் ஆவர். இவர் திருக் கயிலையில் நந்தியின் திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர் என்றும் எண்பெருஞ் சித்திகளில் வல்ல பெருஞ் சித்தர் என்றும் திருவாவடுதுறைக் கோயிலின் மேல்புறத்துள்ள அரசமரத்தடி யில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்திலமர்ந்து ஆண்டிற் கொரு பாடலாக மூவாயிரந்திருமந்திரப் பாடல்களை அருளினார் என்றும் சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணத்தில் கூறி யுள்ளனர். இச்செய்திகளுள் சில, - " சேர்ந்திருந் தேன் சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன் சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன் சிவன் நாமங்க ளோதியே ' எனவும், ' என்னை நன் றாக இறைவன் படைத்தனன் தன்னை நன் முகத் தமிழ்ச் செய்யு மாறே' எனவும், (ஷ. 81) ' மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்' (ஷை. 99) எனவும், ' முத்தி முடிவிது மூவா யிரத்திலே ' (ஷ. 100) எனவும் போ தரும் திருமந்திரப் பாடற்பகுதிகளால் உறுதியாதல் காண்க. ஆனால், இவர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தி லமர்ந்து ஒவ்வோர் ஆண்டிற்கு ஒவ்வொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைக் கூறியருளினார் என்பதற்குத் திருமந்திர நூலில் அகச்சான்றுகள் காணப்படவில்லை. எனினும், இவர் சிவயோகி யாதலால் நெடுங்காலம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்