பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ் மொழியில் பெருமாள் திருமொழியையும் பாடியுள்ளார் இது 105 பாசுரங்களின் தொகுப்பாகும்.

‘அடியாரும் வான வரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே'

இஃது இவரது திருமால் பக்தியைக் காட்டவல்லது. இன்றும் அங்கு இறைவன் முன்னிலையில் உள்ள படி 'குலசேகரப்படி' என்றழைக்கப்படுகிறது.

இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.

'மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன் மா மதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

'

இஃது இராமனுக்கு இவர் பாடிய ஒரு தாலாட்டுப் பாடலாகும்.

இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

11. நம்மாழ்வார்

இவர் திருக்குருகூரில் வேளாளர் குலத்தில் தோன்றினார். இயற்பெயர் நம்மாழ்வார். பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தடியில் யோக நிலையில் இருந்தார். ஆழ்வார்களுள் இவரை உடலாகவும், மற்றையோரை உறுப்பாகவும் வைணவர் கருதுவர். சடகோபன், பராங்குசன், வகுளாபரணன் முதலானவை இவர் வேறு பெயர்களாகும். இவர்