பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161


நாட்டிற்கு அனுப்பி அச்செழுத்து செய்யவைத்தார்; அச்சுப் பொறியும் பெற்றார், தரங்கம்பாடியில் தமிழ் நூற்களை இவர் அச்சிட்டார். அங்கே இவர் தாமே அச்செழுத்துக்களும் செய்தார்; காகிதத் தொழிற்சாலை அமைத்துக் காகிதங்களும் செய்தார். இ வ ர து முயற்சியால் தமிழ் நூற்கள் மிகுதியாய் அச்சாகிப் பலரும் படிக்க வாய்ப்புண்டாயிற்று.

அகராதியும் இலக்கணமும்

சீகன்பால்க் 1715-16 ஆம் ஆ ண் ட ள வி ல் தமிழ்-இலத்தீன் அகராதி.வெளியிட்டார். மற்றும் அங்காளில் இவர் தமிழ்-இலத்தீன் இலக்கணம் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதல்ை தமிழ் வெளியில் பரவுவதற்குப் போதிய வாய்ப்பு ஏற்பட்டது. இவர், வீரமாமுனிவர் தமிழ் பரப்பிய அளவிற்குப் பணி புரியவில்லையாயினும், த ம் மா ல் இயன்ற அளவு இலத்தீன் வா யி லா க த் தமிழ் வளர்க்கும் மு ய ற் சி மேற்கொண்டமை மிகவும் போற்றத்தக்கது.

தமிழ்-இலத்தீன் துா து வ ரு ள் ஒருவராய்த் திகழ்ந்த சீகன்பால்க் 1719-ஆம் ஆண்டு இயற்கை யெய்தினர்.

தமிழ்-இலத்தீன் அகராதி

ஆசிரியர் வீரமாமுனிவர். தமிழ்ச்சொல்லுக்கு இலத்தீன் சொல்லால் பொருள் கூறும் இவ்வகராதி யில் ஏறக்குறைய 9000 தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இஃது தொகுக்கப்பெற்ற காலம்