பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுந் தமிழ்

இலக்கண விளக்கம்

பேச்சுத் தமிழையும் தமிழகத்தின் சுற்றெல்லை களில் பேசப்படும் தமிழ் வழக்காற்றையும் கொடுங் தமிழ் என்றும், நல்ல இலக்கியத் தமிழைச் செங் தமிழ் என்றும் கூறுவது மரபு. இந்த இருவேறு தமிழ் பற்றிய இலக்கணங்களையும் வீரமாமுனிவர் இலத்தின் மொழியில் எழுதியுள்ளார். இவற்றுள் முன்னது குறித்து முதலில் காண்பாம்.

கொடுந்தமிழ் இலக்கண விளக்கம் என்னும்

நூலுக்கு இலத்தீன் மொழியில் வீரமா முனிவரால் “Grammatica Latino – Tamulica. In Qua De Vulgari Tamulic Lingu Idiomate கொடுந்தமிழ் D i c t o , Fusius Tractatur ”.

எனப் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனக்குக் கிடைத்த இந்நூலின் படி (பிரதி),புதுச்சேரி மாதா கோயில் அச்சகத்தில் 1843 ஆம் ஆண்டு அச்சிடப் பெற்றதாகும். இக் கொடுந்தமிழ் இலக்கண விளக்க நூலுடன் செந்தமிழ் இலக்கணச் சுருக்கம் என்னும் நூலும் அதே அச்சகத்தில் அதே ஆண்டில் அச்சிடப்பெற்று இரண்டும் இணைப்பாகக் கட்டடம் (Binding) கட்டப்பட்டுள்ளன.

இனி, கொடுந்தமிழ் இலக்கண விளக்க நூலேப் பற்றிய விவரம் கூறும் நூல் முகப்புப் பக்கம்’ (Title Page) அதிலுள்ளவாறு அப்படியே வருமாறு: