பக்கம்:தமிழ் உரை நடை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தமிழ் உரை கண்ட பட்டவர். அவர் தமிழுக்கும் சமயத்துக்கும் பல வகையில் நற்ருெண்டு செய்து வந்தார் என்ருலும், சிறப்பாகத் தமிழ் உரைநடைக்கு அவர் செய்த தொண்டைக் காண்பதே ஈண்டு நமக்கு ஏற்றதாகும். ஆசிரியர் மறைமலை அடிகளார் பல உரைநடை நூல் களே எழுதியுள்ளார். சமய உண்மைகளையும், தமிழின் பெருமை இனிமை கலங்களையும், இன்றைய விஞ்ஞான அறிவியற் கருத்துக்களையும் எடுத்து விளக்கும் வகையில் அவர் பல நூல்கள் உரைநடையில் எழுதியுள்ளார். உரை நடை நூல்களேயன்றிப் பழைய சிறந்த உரையாசிரியர் களை விஞ்சும் வகையில் அவர் தம் உரைகளிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துக்காட்டிப் பத்துப்பாட்டில் 'முல்லைப்பாட்டு', 'பட்டினப்பாலைபோன்ற நூல்களுக்குச் சிறந்த உரை விளக்கமும் எழுதியுள்ளார். அவர் எழுதிய உரைநூல்களுள் சிறந்தவை. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம், கடவுள் நிலைக்கு மாருண் கொள்கைகள் சைவம் ஆகா, வேளாளர் நாக ரிகம், சிந்தனைக் கட்டுரைகள், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், அறிவுரைக் கொத்து, கோகிலாம்பாள் கடிதங்கள், குமுதவல்லி, சாகுந்தலம், தொலைவில் உணர்தல் என்பவை யாகும். நாடகம், தருக்கம் போன்ற நூல்களேயும் அவர் எழுதியுள்ளார். சுருங்கக் கூறின், இன்றைய தமிழ் காட்டுத் தனித்தமிழ் எழுச்சியின் தந்தையார் மறை மலே அடிகளாரேயாவர் எனக் கூறலாம். எனவே, அவருடைய தனித்தமிழ் உரைநடையில் இரண்டொரு பகுதிகள் கண்டு இப்பகுதியை முடிப்போம். "இங்ங்ணம் அந்த அம்மையைத் தொலைவி லிருந்தே அறிதுயிலிற் செலுத்தித் தாம் எண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/225&oldid=874531" இலிருந்து மீள்விக்கப்பட்டது