பக்கம்:தமிழ் உரை நடை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பதிப்பின் முன்னுரை இந்த நூலை முதன் முதல் வெளியிடும்போது இதன் இரண்டாம் பதிப்பு வெளிவரும் என நான் கருதவில்லை. நாட்டில் இத்தகைய ஆய்வு நூல்கள் அன்று மட்டுமன்றி: இன்றும் அதிகமாகப் போற்றப் பெறவில்லை என்பது. கண்கூடு. எனினும் மொழி ஆய்வு செய்யும் வகையில்: பல்கலைக் கழகங்கள் தமிழ் உரைநடை பற்றியும் ஆய்வு காணும் முறையில் இந்நூலையும் உயர் கல்வி பயில்வார்க்கு உறுதுணை ஆக்கி உள்ளமையின் இதன் மூன்ரும் பதிப்பு. இப்போது வெளிவருகின்றது. இவ்வுரை நடை பற்றி அன்பர்களும் அறிஞர்களும் தத்தம் கருத்துக்களை எழுதி, இதைப் பாராட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி உரித்து. இன்று மொழி உணர் நெறி வளர்கின்ற காரணத். தாலும் பலரும்-தமிழரும் பிறரும்-இம்மொழி வளர்ச்சியை அறிந்து கொள்ள விரும்புவதாலும் இத்துறையில் இன்றும். பலர் கருத்திருத்தின் பயன் விளையும் என்று நம்புகிறேன். அதன் வழி தமிழ் உரை நடையின் ஏற்றமும் சிறக்கும். மறுமுறையும் அனைவருக்கும் நன்றிகூறி அமைகின்றேன். சென்னை-30 5–4–1976. தமிழ்க்கலை இல்லம்

அ. மு. பரமசிவானந்தம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/8&oldid=874767" இலிருந்து மீள்விக்கப்பட்டது