பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 த. கோவேந்தன்

கொண்டாடினர் பண்டைய மெக்சிக்கோ நாட்டினரும், வடகிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மக்களும், ஐனுர மரபினரும் தங்களுடைய பிரதம தேவதையாகத் தீயைக் கொண்டாடினர் பண்டைய அசிரியரும், கல்தேயரும், பீனிவியரும், ஆரியரும் தீயின் மூலமாகத் தாங்கள் பலியிடும் பொருள்களைத் தெய்வங்களுக்கோ,இறந்து போனவர்களின் ஆன்மாவுக்கோ போய்ச் சேருமாறு செய்ய முடியுமென இன்றும் நம்புகிறார்கள் தீ மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாகையாலும், அக் காலத்தில் தீ மூட்டுவது மிகவும் கடினமான காரிய மாதலாலும் தீயைத் தெய்வமாகவே போற்றி வந்தனர் கிரேக்கத் தத்துவ ஞானிகள் பிரபஞ்சம் முழுதும் தீ, காற்று, பூமி, நீர் ஆகிய நான்கு தனிமங்களாலானதாகக் கருதினர் பிருதிவி, அப்பு:தேயு (தீ), வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாலானது உலகம் என இந்து, பெளத்த, சமண மதத்தினர் கருதி வந்தனர்

தீயை மனிதன் பல வகையில் பயன்படுத்தி வந்த போதிலும், பிரெஞ்சு ரசாயன அறிஞரான லவாசியே என்பவர் 1783-ல் ஆக்சிஜன் என்ற வாயுவின் பண்புகளைக் கண்டு கூறியவரையில், தீயின் உண்மையான தன்மை யைப் பற்றி யாரும் அறியவில்லை ஆக்சிகரணம் என்பது ஒரு பொருளுடன் ஆக்சிஜன் சேர்ந்து வேறு பொருள் (ஆக்சைடு)உண்டாவதாகும். அந்த ரசாயன வினையின் போது தீ உண்டாகிறது காற்றடித்தால் தீ நன்கு எரியக் காரணம் ஆக்சிஜன் மிகுதியாகக் கிடைத்தது, ஆக்சி கரணம் விரைவாக நடப்பதே மூடிய பாத்திரத்தில் தீ அணையக் காரணம், அப்பாத்திரத்திலுள்ள ஆக்சிஜன் தீர்ந்ததும், ஆக்சிகரணம் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஆக்சிஜன் இல்லாது போவ தேயாகும்

எரியும் பொருள்களிலிருந்து வெளிப்படும் வெப்பமும் ஒளியுமே தீயாகும் பொருள்கள் ஆக்சிஜ னோடு வினைப்பட்டு ஆக்சிகரணம் ஏற்படுவதாலேயே, பொருள்கள் எரிந்து தீ உண்டாகிறது