பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 - த. கோவேந்தன்

என்றம் பிரிக்கக்கூடிய நிலையில் அமைவதால், ஒருமையென்ற நிலையை மக்கள் மறந்தனர் அவ்விடம் முதலிய இடங்களில் வகரம் உடம்படுமெய்யெனக் கூறுவதற்குப் பொருந்தி இருந்தாலும், அவ் யானை என்பதில் வகரத்தை அவ்வாறு கூறுவதற்கில்லை எனவே, அங்கெல்லாம் அவ் என்பதே உளதெனக் கூறலாம் அவ் என்பது பன்மை என்ற நிலையை மக்கள் மறந்தபோது, மேலும் ஒருமை விகுதி சேர்த்து அஃது என வழங்கலாயினர் இவ்வாறு ஒரிடைச்சொல் தன் பொருளையிழந்தபோது வேறு இடைச்சொல் சேர்த்து வழங்குவது திராவிட மொழிகளின் இயல்பென்பதும், பொருளிழந்த இடைச் சொற்களைச் சாரியையெனத் தமிழ் மொழி வழங்கும் என்பதும் இங்கே குறிக்கத்தக்கன வகரம் இவ்வாறு மொழியின் ஈற்றில் பண்டைக் காலத்தில் வந்தாலும், இடைக் காலத்திலிருந்தே இவ் வீற்றுக்குப் பின்னும் உகரச்சாரியை தந்து உகர ஈறாக வழங்குவது வழக்கமாகிவிட்டது வவ்வு, கவ்வு, தெவ்வு எனக் காண்க

பு என முடிந்த சொற்கள் பிற்காலத்தில் வுகரமாக முடியக் காண்கிறோம் ஆனால் இன்றும் நகுபு முதலிய வினையெச்சங்கள், வகரவுகர ஈறாக இலக்கியங்களில் மாறவில்லை எனவே இன்று தின்பர், உண்பர் முதலிய இடங்களில் னகர ணகர பகரமே மெல்லெழுத்தின் பின், எதிர்கால முதலியவற்றில் வரும் கல், கேள், நட, பார் முதலிய பகுதிகள் செய்யும் அல்லது செய அல்லது செயின் என்ற வினை வடிவங்களில் வரும்போது பகுதிப் பொருள் விகுதியாகவோ, சாரியையாகவோ, பழம் பகுதிக்குப்பின் ‘கு’ பெற்று வரத்தக்கவை எதிர்காலத்தில் வரும்போதும் தொழிற்பெயர் விகுதி பெறும் போதும், ஈரேவல் வினை அமைக்கும் போதும் பகரமே பெற்றுபெற்றுவருகின்றன. மற்றைய பகுதிகள் வகரம் பெறக் காண்கிறோம் ஆனால், செய்பு என்னும் வாய்பாட்டிலும், பிற பழைய இடங்களிலும் இவ்வாறு