பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 த. கோவேந்தன்

பத்தி 4: அவனுடைய வேள்விக்குடிச் செப்பேடுகள் பத்தி 5 : பாண்டிய அரசனான வாருணவர் மனுடைய ஐவர்மலைக் கல்வெட்டு. சக 792, அதாவது கி. பி. 870ஆம் ஆண்டு

பத்தி 6 : பாண்டிய அரசன் வாருணவர்மனுடைய திருச்செந்துர்க் கல்வெட்டு.

பத்தி 7 : இராஜசிம்ம பாண்டியனுடைய பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகள். கி. பி. பத்தாம் நூற்றாண் டின் முற்பகுதி.

பத்தி 8 : முதற் பராந்தக ச்ோழனுடைய ஆனை மலைக் கல்வெட்டு. கி பி 939ஆம் ஆண்டு

பத்தி 9 : கி. பி. பதினோராம் நூற்றாணடின் முற் பகுதியைச் சார்ந்தவனான வேணாட்டு அரசன் பாரு கர ரவிவர்மனுடைய திருக்கரத்தானம் கல்வெட்டுக்கள்.

பத்தி 10, 11 : உதயமார்த்தாண்ட வர்மனுடைய கொல்லுர்மடச் செப்பேடுகள். அந்தச் சாசனத்தின் முற்பகுதி ஒருவகையாகவும், பிற்பகுதி வேறுவகையாக வும் உள்ளன இருவகை எழுத்துகளையும் இந்தப் பகுதிகள் காட்டுவன. கொல்லம் 364, அதாவது கி. பி. 188ஆம் ஆண்டு.

பத்தி 12: கல்பாத்திக் கல்வெட்டு. சுமார் கி.பி.15ஆம் நூற்றாண்டு.

பத்தி 13:கொச்சி அரசருக்கும் "உலாந்தா கும்பெனி' என்னும் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் ஏற்பட்ட உடன்படிக்கை பொறிக்கப்பட்டுள்ள பாலியச் செப்பேடுகள். கி.பி. 6/63ஆம் ஆண்டு.

பத்தி 14 : மின்சிறை மடத்துச் செப்பேடுகள், கி. பி. 1770ஆம் ஆண்டு.