பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 33

எழுத்துகளை நீக்கித் தமிழ் எழுத்தாலேயே எழுத வேண்டுமென்று வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇச் எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்று எச்சவியற் சூத்திரத்தில் கூறியுள்ளனர் மெய் எழுத்துகள் உயிரெழுத்துக்களோடு கூடியவழி வரி வடிவில் உருவு திரிதலைப் புள்ளியில்லா எல்லா மெய்யும்’ என்று தொடங்கும் சூத்திரத்தில் அவ் வாசிரியர் குறித்துள்ளனர் அன்றியும், ஆசிரியர் தொல் காப்பியனார், மெய்யெழுத்துகளும் எகர ஒகர எழுத்து களும் புள்ளி பெற்று நிற்றல் வேண்டும் என்பதையும், மகரக்குறுக்கம் மெய்ப்புள்ளியோடு உள்ளே மற்றொரு புள்ளியும் பெறுதல் வேண்டும் என்பதையும், மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்’, ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’, உட்பெறு புள்ளி உருவா கும்மே” என்ற சூத்திரங்களில் கூறி உள்ளனர் இவற்றால் தொல் காப்பியனார் காலத்திற்கு முன்னரே தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் வழக்கில் இருந்தமை தெள்ளிதிற் புலப்படும் அசோகச் சக்கர வர்த்தியின் பிராமி எழுத்துகள் கி மு முதல் நூற்றாண்டில்தான் சமணமுனிவர்களின் மூலமாகத் தமிழ் நாட்டில் வந்து பரவியிருத்தல் வேண்டும் ஆகவே, பிராமி எழுத்துக்கள் இருந்தன என்பது தொல்காப்பியச் சூத்திரங்களால் பெறப் படுகின்றது அவ்வெழுத்துகள் வட்ட எழுத்துகளே என்பது தேற்றம் எனவே பிராமி எழுத்துகளிலிருந்து வட்டெழுத்துகள் தோன்றி இருத்தல் வேண்டும் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது

வலமிருந்து இடமாக எழுதப்பட்ட பீனிவிய எழுத்துக்களிலிருந்து இடமிருந்து வலமாக எழுதப்பட்ட வட்டெழுத்துகள் தோன்றியிருக்க முடியாது என்பது திண்ணம்

ஆகவே, பண்டைத் தமிழ் எழுத்துகளாகிய வட்டெழுத்துகள், தமிழ் மக்களாலேயே முற்காலத்தில்