பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 47

'அ' என்பதற்கு கடவுள் என்பதே பொருள் என்பர் அது திருமாலையும் சிவனையும் குறிக்கும் அவ்வென் சொற்பொருளாவான் (பாகவதம் சிசுபா 20) அகாரம் - அவன் (திருமந்திரம்751) அகரம் என அறிவாகி (விநாயக புராணம் -1) என்பதனால் கடவுளறிவுக்கும் அது பெயராம்

இது தமிழ் நெடுங்கணக்கிலும் இந்திய நாட்டுப்பிறமொழிகளின் நெடுங்கணக்கிலும் வரும் இரண்டாம் எழுத்து; இரண்டாம் உயிர்; நெடில் அகரம்போல அங்காத்தலால் பிறப்பது மாத்திரை அல்லது உச்சரிப்பின் நேரம் அகரத்தைப்போல் இதற்கு இரண்டு மடங்கு ஆம் என்பது இலக்கண நூல் மரபு; ஆனால், வழக்கில் பெரிதும் குறைந்துவரும் மாத்திரை யால் மட்டுமன்றிச் சுரத்தாலும், நா முதலியவை சிறிது முறுக்கிக்கொண்டு நிற்பதாலும் அகரத்தினும் இது வேறாம்

என்று இதனை எழுதுவர் ஒலி நூலார் அஆ என்று ஒலித்துக் காண்க இது நெகிழ்ந்து போகாமைக்கு அளவெடுப்பது பழைய வழக்கம் நெகிழ்ச்சியைத் தடுப்பதற்கோ, வற்புறுத்தற்கோ அகரம் ஆகாரமாகவும் மாறும் பல, சில>பலாஅம், சிலா அம்; நில-நிலா இங்கு அகரமே முதல் வடிவம் என்பாரும் உண்டு அ+அ=ஆ என வடமொழியில் வரும் தீர்க்க சந்தி வடசொற்களில் நேராகவும், குள+ஆம்பல்=குளாஅம்பல்; மர+அடி =மராஅடி என்பன போன்ற தமிழ்ச் சொற்களில் மருஉ வழக்காகவும் வழங்கும்