பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 95

பொருள் : கு என்பது அவனுக்கு என்பதிற் போல நான்காம் வேற்றுமை யுருபாகவும், செய்குவேன் என்பதிற்போலச் சாரியை யாகவும், போகு என்பதிற் போல ஆக்க நிலையுருபு (பகுதிப்பொருள் விகுதி) ஆகவும், நன்கு என்பதிற் போலப் பண்புப் பெயர் விகுதியாகவும், போக்கு என்பதிற்போலத் தொழிற்பெயர் விகுதியாகவும், செய்கு (செய்வேன்) என்பதிற்போலத் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று விகுதியாகவும், குதர்க்கம் என்பதிற்போல வடமொழிச் சொற்களில் தீமைப்பொருள் குறிக்கும் உபசருக்கமாகவும் வரும். கு என்பதற்கு உலகம் என்றும் பொருள் உண்டு.

'க்+ஊ’ என்பது கூ என்று உயிர் மெய்யாக எழுதப்பெறும் கூ ன்பதன் கீழ்க் கோட்டின் நுனியி லிருந்து இரண்டு குறுக்குக் கோடுகள் வலப்புறம் சென்றன. பின் குறுக்குக் கோட்டிலிருந்து கீழ் இறங்கி வலமாக ஒரு கோடாய் சென்றது

கோலெழுத்து : 8ஆம் நூற்றாண்டு 9ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 13ஆம் நூற்றாண்டு 14ஆம் நூற்றாண்டு 16ஆம் நூற்றாண்டு இக்காலம்

i